ஆரல்வாய்மொழி, ஆக. 17: தோவாளை சுப்பிரமணிய சுவாமி கோயிலில் 55 வது ஆண்டு மலர்முழுக்கு விழா நேற்று காலை கணபதி ஹோமத்துடன் தொடங்கியது. இதனைத் தொடர்ந்து 9 மணிக்கு காக்கும் விநாயகர் கோயிலில் இருந்து பால் குடம் மற்றும் வேல் குத்துதல் மற்றும் காவடி பவனி தொடங்கியது. நிகழ்ச்சிக்கு தளவாய்சுந்தரம் எம்எல்ஏ தலைமை தாங்கி ஊர்வலத்தை தொடங்கி வைத்தார். அறங்காவலர் குழு தலைவர் பிரபா ராமகிருஷ்ணன், வடக்கூர் ஊர் தலைவர் வேலாயுதம் பிள்ளை, தெக்கூர் கிருஷ்ணன்புதூர் ஊர் தலைவர் கேசவ முருகன், தோவாளை ஊராட்சி ஒன்றிய தலைவர் சாந்தினி பகவதியப்பன், ஆரல்வாய்மொழி பேரூராட்சி மன்ற தலைவர் முத்துகுமார், தோவாளை ஊராட்சிமன்ற தலைவர் நெடுஞ்செழியன், திருமலை முருகன் பக்தர்கள் அறக்கட்டளை செயலாளர் லெட்சுமணபெருமாள் காரியம் சேர்மராஜா ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
பால்குட ஊர்வலம் நாகர்கோவில் ஆரல்வாய்மொழி தேசிய நெடுஞ்சாலை வழியாக சென்று சுப்பிரமணியபுரம் கமல் நகர், பண்டாரபுரம் புதூர், தெக்கூர் பகுதி வழியாக மலைமேல் அமைந்துள்ள திருமலை முருகன் கோயிலை வந்து அடைந்தது. மதியம் 12 மணிக்கு பால், பன்னீர் சந்தனம், தேன், இளநீர் அபிஷேகங்கள் நடைபெற்றது. தொடர்ந்து அலங்கார தீபாரதனையும் நடைபெற்றது. முன்பாக 11 மணிக்கு அன்னதானம் நடைபெற்றது. இதனை கன்னியாகுமரி விவேகானந்த கேந்திர உப தலைவர் ஹனுமந்தராவ் தொடங்கி வைத்தார். மாலை 5 மணிக்கு சிறப்பு நாதஸ்வர இசை நிகழ்ச்சி நடைபெற்றது. இதனை அரசு வழக்கறிஞர் கே.எஸ். பழனி தொடங்கி வைத்தார். தொடர்ந்து தோவாளை அரசு பள்ளியில் 10ம் வகுப்பு மற்றும் 12ம் வகுப்பில் அதிக மதிப்பெண் பெற்ற முதல் மூன்று மாணவர்களுக்கு பாராட்டும் பரிசுகளும் வழங்கப்பட்டது. மாலை 6.30 மணிக்கு திரைப்பட மெல்லிசை விருந்து நடைபெற்றது. இரவு 9.30 மணிக்கு மலர் முழுக்கு தொடங்கப்பட்டது. இதனை ஐயப்பன் தொடங்கி வைத்தார். இரவு 11. 45க்கு சிறப்பு தீபாராதனை நடைபெற்றது.
நிகழ்ச்சிக்கு சிறப்பு விருந்தினர்களாக அறங்காவலர் குழு உறுப்பினர் சுந்தரி, தோவாளை ஊராட்சி ஒன்றிய துணைத் தலைவர் தாணு, அதிமுக மாநில வர்த்தக அணி இணைச் செயலாளர் ராஜன், மாநில இலக்கிய அணி இணைச் செயலாளர் சந்துரு, பகுதி செயலாளர்கள், ஜெயகோபால் முருகேஸ்வரன், மாவட்ட பேரவை செயலாளர் ராஜாராம் மாவட்ட கழகத் துணைச் செயலாளர் சுகுமாரன், இணைச் செயலாளர் பார்வதி, மாவட்ட இளைஞர் மற்றும் இளம் பெண்கள் பாசறை செயலாளர் அக்ஷயாகண்ணன், தோவாளை ஒன்றிய அதிமுக விவசாய அணி தலைவர் முத்துசுவாமி, தோவாளை தெற்கு ஒன்றிய இளைஞர் மற்றும் இளம் பெண்கள் பாசறை துணைத் தலைவர் சிவசுப்பிரமணி, தாழக்குடி பேரூராட்சிமன்ற முன்னாள் தலைவர் ரோகிணிஐயப்பன் மற்றும் திருமலை முருகன் பக்தர்கள் அறக்கட்டளை தலைவர் பத்மநாப பிள்ளை, துணைச் செயலாளர் பாலச்சந்திரன், துணைத் தலைவர் மகாதேவன், பொருளாளர் சுடலையாண்டி பிள்ளை மற்றும் செயற்குழு உறுப்பினர்கள் பூதலிங்கம், பகவதிபெருமாள், ஆரல் கிருஷ்ணன், வள்ளியம்மாள், வன்னியபெருமாள் வழக்கறிஞர் நெல்லையப்பன் மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டனர்.