நாகர்கோவில், மே 26: தோவாளை அருகே ஆக்ரமிப்பு செய்து ேதாட்டமாக மாற்றப்பட்ட குளம் வருவாய்துறை அதிகாரிகளால் மீட்கப்பட்டது. தோவாளை தாலுகா சிறமடம் வருவாய் கிராமத்தில் பிள்ளையார் ஊற்று குளம் உள்ளது. இந்த குளம் ஊரக வளர்ச்சி துறையின் கட்டுப்பாட்டி கீழ் உள்ளது ஆகும். அந்த பகுதியை சேர்ந்த முத்துக்குமார் என்பவர் ஆக்ரமிப்பு செய்து குளத்தினை தோட்டமாக மாற்றி வைத்து இருந்ததை அகற்ற சென்னை உயர்நீதிமன்ற மதுரை கிளையின் தீர்ப்பின்படி வருவாய்துறை சார்பில் நிள அளவீடு செய்யப்பட்டது.
தோவாளை தாசில்தார் கோலப்பன், வட்டார வளர்ச்சி அலுவலர், மண்டல துணை தாசில்தார், வருவாய் ஆய்வாளர் கிராம நிர்வாக அலுவலர் நில அளவர்கள் உடனிருந்தனர். குளத்தில் ஆக்ரமிப்புகள் குறியீடு செய்யப்பட்டது. ஆக்ரமிப்பு ஏதும் செய்யக்கூடாது. அரசுக்கு சொந்தமானது என தகவல் பலகை வைக்கப்பட்டது.