வைகுண்டம், ஆக.3: வைகுண்டம் அருகே தெற்கு தோழப்பன்பண்ணையில் சிறப்பு பெற்ற பொய்சொல்லா மெய்யன் சாஸ்தா கோயில் அமைந்துள்ளது. இக்கோயிலில் அப்பகுதியை சேர்ந்தவர் இரவு காவலாளியாக வேலை பார்த்து வருகிறார். சம்பவத்தன்று இரவு பணிக்கு வந்த அவர் உடல்நிலை சரியில்லாததால் வீட்டிற்கு சென்றுவிட்டார். இந்நிலையில், நள்ளிரவில் கோயிலில் ஏதோ சத்தம் கேட்டு அவர் கோயிலுக்கு திரும்ப வந்து பார்த்துள்ளார். அப்போது கோயில் சுவரை தாண்டிக்குதித்து மர்மநபர்கள் ஓடியுள்ளனர். உடனடியாக அவர் கோயிலுக்குள் சென்று பார்த்தபோது கோயிலின் உண்டியல் பூட்டு உடைக்கப்பட்டு உள்ளே இருந்து பணத்தை கொள்ளையடித்துவிட்டு சென்றுள்ளனர். கோயிலின் உள்ளே கேமரா மற்றும் அலாரம் எச்சரிக்கை மணியின் வயர்கள் துண்டிக்கப்பட்டு கிடந்தது. இதுகுறித்து கோயில் செயல் அலுவலர் தாரணி வைகுண்டம் போலீசில் புகார் கொடுத்தார். அதன்பேரில் சப்இன்ஸ்பெக்டர் அந்தோணிராஜ் வழக்குப்பதிவு செய்து மர்மநபர்களை வலைவீசி தேடி வருகிறார்.
தோழப்பன்பண்ணை சாஸ்தா கோயிலில் கொள்ளை
previous post