அரியலூர், ஆக. 23: அரியலூர் அடுத்த உசேனாபாத் ஊராட்சியில் கால்நடைகளுக்கு இலவச தோல் கழலை நோய் தடுப்பூசி செலுத்தும் முகாம் நேற்று நடைபெற்றது. ஊராட்சித் தலைவர் வளர்மதி ஜெயராமன் முகாமை தொடங்கிவைத்தார். அரியலூர் கோட்ட கால்நடை பராமரிப்பு துறை உதவி இயக்குநர் முருகேசன் முன்னிலை வகித்தார். உசேனாபாத் ஊராட்சியை சேர்ந்த 58 விவசாயிகள் தங்களுடைய பசு, காளை என 300 மாடுகளை அழைத்து வந்து தோல் கழலை நோய் தடுப்பூசி செலுத்திக்கொண்டனர்.
இந்த முகாமில் கடுகூர் கால்நடை உதவி மருத்துவர் குமார், ஓட்ட கோயில் கால்நடை உதவி மருத்துவர் வேல்முருகன், அரியலூர் நடமாடும் கால்நடை மரு ந்தக கால்நடை உதவி மருத்துவர் திருநாவுக்கரசு, கால்நடை பராமரிப்பு உதவியாளர் ராமலிங்கம் உள்ளிட்ட மருத்துவக்குழுவினர், கால்நடைகளுக்கு தடுப்பூசி செலுத்ததினர். தோல் கழலை நோய் தடுப்பூசி செலுத்துவதன் அவசியம் குறித்து விவசாயிகளுக்கு துண்டு பிரசுரங்களை வழங்கி விழிப்புணர்வு ஏற்படுத்தினர். நிறைவில் ஊராட்சி மன்ற துணைத் தலைவர் ராமலிங்கம் நன்றி கூறினார்.