திங்கள்சந்தை, ஜூன் 7: குமரி மாவட்டத்தில் கன்னியாகுமரி – நாகர்கோவில், நாகர்கோவில் – திருவனந்தபுரம் காரோடு வரை நான்கு வழிச்சாலை பணிகள் நடக்கின்றன. முதற்கட்டமாக நீர் நிலைகளில் பாலங்கள் அமைக்கும் பணி நடக்கிறது. 60 க்கும் மேற்பட்ட பாலங்கள் அமைக்கப்பட வேண்டும். இதில் நாகர்கோவில் அடுத்த தோட்டியோடு குளத்திலும் பாலம் அமைக்கும் பணி நடக்கிறது. வட மாநில தொழிலாளர்கள் இந்த பணியில் ஈடுபட்டுள்ளனர். நேற்றும் வழக்கம் போல் பணிகள் நடந்தன. அப்போது பணியில் ஈடுபட்டு இருந்த ராட்சத கிரேன் சரிந்தது. இதில் வட மாநில தொழிலாளர் ஒருவர் பலத்த காயம் அடைந்தார். உடனடியாக அவரை மீட்டு ஆசாரிபள்ளம் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். விபத்து குறித்து அறிந்ததும் இரணியல் போலீசார் சென்று விசாரணை நடத்தினர்.
தோட்டியோடு அருகே கிரேன் சரிந்து வாலிபர் படுகாயம்
0
previous post