தோகைமலை, மே 25: தோகைமலை பகுதியில் மதுபானங்கள் விற்பனை செய்த பெண் உள்பட இருவரை போலீசார் கைது செய்தனர்.
கரூர் மாவட்டம், தோகைமலை அருகே கழுகூர் ஊராட்சி அ.உடையாபட்டி வீரப்பன் மகன் சின்னதுரை (49). இவர் அதே பகுதியில் நடத்தி வரும் பெட்டிக்கடையில் மதுபானங்களை பதுக்கி வைத்து விற்பனை செய்து வந்ததாகவும், இதேபோல் அதே பகுதியை சேர்ந்த தங்கவேல் மனைவி மாரியாயி (45) என்பவரும், அதே பகுதியில் நடத்தி வரும் பெட்டிக்கடையில் மதுபானங்களை பதுக்கி வைத்து விற்பனை செய்து வந்ததாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது.
தகவலின்பேரில் தோகைமலை போலீசார் அந்த பகுதியில் ஆய்வு செய்தனர். அப்போது சின்னதுரை மற்றும் மாரியாயி ஆகியோர் அனுமதியின்றி மதுபானங்களை பதுக்கி வைத்து விற்பனை செய்தது தெரியவந்தது. இதனைத் தொடர்ந்து அவர்களிடம் இருந்து மதுபானங்களை பறிமுதல் செய்த போலீசார் இருவரையும் கைது செய்தனர்.