தோகைமலை, நவ. 10: தோகைமலையில் இளைஞர் திறன் திருவிழா நடந்தது. கரூர் மாவட்டம் தோகைமலையில் தமிழ்நாடு மகளிர் மேம்பாட்டு நிறுவனம், தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்கம் மற்றும் தீனதயாள் உபத்யாய கிராமின் கௌசல்ய யோஜனா சார்பாக இளைஞர் திறன் திருவிழா தோகைமலை ஊராட்சி ஒன்றிய அலுவலக வளாகத்தில் நடந்தது. தோகைமலை ஒன்றிய குழு தலைவர் சுகந்தி சசிகுமார் தலைமை வகித்தார். ஒன்றிய ஆனையர் ராஜேந்திரன், மகளிர் திட்டத்தின் உதவி திட்ட அலுவலர்கள் அன்புராஜா, ராஜேஸ், சிந்து முன்னிலை வகித்தனர்.
முன்னதாக தோகைமலை வட்டார இயக்க மேலாளர் சத்யா வரவேற்றார். சிறப்பு அழைப்பாளராக மகளிர் திட்டத்தின் திட்ட இயக்குநர் பாபு கலந்து கொண்டு திறன் மேம்பாட்டு பயிற்கு தேர்வு செய்தவர்களுக்கு சான்றுகள் வழங்கினார்.
இதில் 18 வயது முதல் 35 வயது வரை 10 வகுப்பு வரை பயின்று உள்ள பெண்கள் கலந்து கொண்டனர். இதேபோல் எஸ்சி, எஸ்டி மற்றும் சிறுபாண்மையினக்கு முன்னுரிமை அளிக்கப்பட்டது. மேலும் தையல் பயிற்சி, சிஎன்சி மிசின் ஆப்ரேட்டர், நர்சிங், சில்லரை வணிகம், தகவல் தொழில் நுட்ப சேவை போன்ற பயிற்சிகளுக்கு 3 முதல் 6 மாதம் வரை இலவச பயிற்சி அளிக்கப்படுகிறது. இந்த பயிற்சியின் போது போக்குவரத்து, உணவு, தங்குமிடம், சீருடை, பாட புத்தகம் மற்றும் காப்பீடு இலவசமாக வழங்கப்படுகிறது.
இந்த பயிற்சியில் கலந்து கொண்டு பயிற்சி பெற்றவர்களுக்கு பயிற்சி நிறுவனத்தின் வாயிலாக வேலைவாய்ப்பு பெற்றுத்தரப்படுகிறது. இதேபோல் செல்போன் சர்வீஸ், போட்டோ ஃபிரேம் லேமினேசன் மற்றும் ஸ்கிரின் பிரிண்ட்டிங், சணல் பை தயாரித்தல், சிசிடிவி கேமரா, அழகு கலை பயிற்சி, இருசக்கர வாகனம் பழுதுபார்த்தல், கம்ப்யூட்டர், செயற்கை ஆவணங்கள் தயாhpத்தல் ஆகிய பயிற்சிகள் ஆர்எஸ்இடிஐ மூலம் சுய வேலைவாய்ப்பு பயிற்சிகள் வழங்கப்படுகிறது. அதனை தொடர்ந்து 161 பேர் கலந்து கொண்டவர்களில் 136 பேர் பயிற்சிக்கு தேர் செய்யப்பட்டனர். பயிற்சிகளுக்கு தேர்வு செய்யப்பட்ட பெண்களுக்கு சான்றுகள் வழங்கி ஆலோசனை வழங்கப்பட்டது.
இதேபோல் மகளிர் சுய உதவிக்குழு உறப்பினர்கள் தயாரிக்கப்படும் வீட்டு உபயோகப் பொருட்கள் காட்சி படுத்தப்பட்டு இருந்தது. இந்த நிகழ்ச்சியில் மகளிர் திட்ட இயக்க மேலாளர்கள், வட்டார ஒருங்கிணைப்பாளர்கள் உள்பட மகளிர் சுய உதவிக்குழு உறுப்பினர்கள் கலந்து கொண்டனர். இறுதியாக கடவூர் வட்டார இயக்க மேலாளர் முருகேசன் நன்றி தெரிவித்தார்.