கோவை: தமிழ்நாடு வேளாண்மை பல்கலைக்கழகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளதாவது: ஒன்றிய அரசின் வேளாண் மற்றும் விவசாய நலத்துறை அமைச்சக திட்டத்தின் 2 பிரிவுகள் மூலம், புதிய வேளாண் தொழில் முனைவோருக்கு ரூ.5 லட்சம் வரை மானியம், வேளாண் துளிர் நிறுவனங்களுக்கான ரூ.25 லட்சம் வரை மானியம் வழங்கப்படுகிறது. ஒன்றிய அரசின் வேளாண் மற்றும் விவசாய நலத்துறை அமைச்சகத்தின் திட்டத்தின் கீழ் 2019 முதல் 2022 வரை ரூ.8.10 கோடி மானியம் தொழில்நுட்ப வணிக காப்பகத்தின் 70 தொழில் முனைவோர்களுக்கு வழங்கப்பட்டுள்ளது. ஒன்றிய அரசின் வேளாண் மற்றும் விவசாய நலத்துறை அமைச்சகத்தின் கீழ் தேர்ந்தெடுக்கபட்ட புத்தொழில் முனைவோர்கள் மற்றும் உரிமையாளர்களுக்கு தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தின் முனைவர் வெ.கீதாலட்சுமி மானியங்களை வழங்கினார்.