கிருஷ்ணகிரி, ஆக.25: கெலமங்கலம் அடுத்த பொம்மதாதனூர் காளிநாயக்கனப்பள்ளி பகுதியைச் சேர்ந்தவர் முனிந்தர்(32), கூலி தொழிலாளி. இவர் கடந்த மூன்று மாதங்களுக்கு முன்பு, வீட்டில் இருந்து வெளியே சென்றார். பின்னர் அவர் வீடு திரும்பவில்லை. அவரை குடும்பத்தினர் பல்வேறு இடங்களில் தேடியும் கிடைக்கவில்லை. இதுபற்றி நேற்று, அவரது தம்பி கெலமங்கலம் போலீசில் புகார் அளித்தார். அதன்பேரில் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.