தூத்துக்குடி, நவ. 23: தூத்துக்குடி போல்பேட்டையை சேர்ந்தவர் நாகராஜ் (49). இவர், இப்பகுதியில் இஸ்திரி கடை நடத்தி வந்தார். வீடு கட்டுவதற்காக வங்கியில் கடன் வங்கியுள்ளார். இந்நிலையில் கடந்த சில மாதங்களாக வருமானம் இல்லாததால் கடன்தவணையை செலுத்த முடியவில்லை என கூறப்படுகிறது. இதனால் மனவேதனையில் இருந்த நாகராஜ் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து வடபாகம் போலீசார் வழக்கு பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
தொழிலாளி தற்கொலை
0
previous post