திருச்சி, ஜூன் 19:திருச்சியில் தொழிலாளியை தாக்கிய வாலிபரை போலீசார் கைது செய்தனர்.
திருச்சி உறையூர் மேல கல்நாயக்கன் தெருவைச் சேர்ந்தவர் சர்புதின்(35). கல்நாயக்கன் தெரு எழில்நகர் பகுதியைச் சேர்ந்தவர் மணிகண்டன் (31.) இருவரும் சேர்ந்து இரும்பு தொழில் செய்து வந்தனர். பின்னர் மணிகண்டன் தனியாக பிரிந்து சென்று தொழில் செய்து வந்தார். இதனால் இருவருக்கும் இடையே முன் விரோதம் இருந்ததாக கூறப்படுகிறது. ஜூன் 15ம் தேதி சர்புதீன் மணிகண்டனிடம் என்னுடைய ஒர்க் ஆர்டரை எதற்காக எடுத்து வேலை செய்கிறாய் என கேட்டு வாக்குவாதத்தில் ஈடுபட்டார்.
இதில் ஆத்திரமடைந்த மணிகண்டன் சர்புதீனை மரக்கட்டையால் தாக்கிதால் அவர் படுகாயம் அடைந்தார். இதுகுறித்து உறையூர் போலீசார் வழக்கு பதிந்து மணிகண்டனை கைது செய்தனர்.