அரூர், மே 19: தர்மபுரி மாவட்டம் தீர்த்தமலை காப்பு காடு பகுதியில், காட்டுப்பன்றிகளை வேட்டையாடுவதாக மாவட்ட வன அலுவலர் ராஜாங்கத்திற்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதையடுத்து தீர்த்தமலை வனச்சரகர் கோகுல் மற்றும் வனத்துறையினர் தீர்த்தமலை காப்பு காடு பகுதியில் ரோந்து சென்றனர். அப்போது, தீர்த்தமலை காப்பு காட்டில் காட்டுப்பன்றியை வேட்டையாடி, அதன் கறியை வீட்டில் சமைத்த, அரூர் கீழ்செங்கப்பாடி பகுதியைச் சேர்ந்த முருகன்(45). கூலி தொழிலாளி என்பவரை வனத்துறையினர் கையும் களவுமாக பிடித்தனர்.
பின்னர் கறியை பறிமுதல் செய்து அழித்தனர். இதையடுத்து அவரை பிடித்து, மாவட்ட வன அலுவலர் முன் ஆஜர்படுத்தினர். இதையடுத்து அவர் காட்டு பன்றியை வேட்டையாடிய குற்றத்திற்காக, முருகனுக்கு ரூ.50ஆயிரம் அபராதம் விதித்து எச்சரித்து அனுப்பினர்.