சேலம், நவ.16: சேலம் அம்மாபேட்டை பகுதியில் 4பேர் கஞ்சா விaற்பனை செய்துகொண்டிருந்தனர். இதனை அந்த பகுதியை சேர்ந்த தொழிலாளி மாணிக்கம்(42) என்பவர் தட்டிக்கேட்டார். அப்போது அவருக்கு 4பேரும் கொலை மிரட்டல் விடுத்தனர். இதுபற்றி அவர் அம்மாபேட்டை போலீசில் புகார் அளித்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து மாணிக்கத்திற்கு கொலை மிரட்டல் விடுத்த, அம்மாபேட்டை கார்பெட் தெரு பாண்டியன்தெருவை சேர்ந்த நாகராஜன், கிருஷ்ணன்(21), மாயவன்(25), ரயில்வே லைனை சேர்ந்த சூர்யா(23) ஆகிய 4பேரையும் கைது செய்தனர். மேலும் அவர்களிடமிருந்து 400கிராம் கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டது.