தர்மபுரி, ஆக.23: தர்மபுரி மாவட்ட ஏஐடியூசி ஊரக வளர்ச்சி துறை தொழிலாளர்கள் சங்கத்தின் மாவட்ட பேரவை கூட்டம், சுதா தலைமையில் நேற்று நடந்தது. வசந்தி வரவேற்றார். சரஸ்வதி, நீலா, இந்திரா, குயிலா ஆகியோர் முன்னிலை வகித்தனர். ஏஐடியூசி மாநில துணைத்தலைவர் மணி, விதொச மாநில செயலாளர் பிரதாபன் ஆகியோர் கோரிக்கைகளை வலியுறுத்தி பேசினர். கூட்டத்தில், ஏஐடியூசி மாவட்ட துணைத்தலைவர் சுதர்சனன், உள்ளாட்சி பணியாளர் சங்க மாவட்ட தலைவர் மனோகரன், ஆஷா பணியாளர் சங்க மாவட்ட தலைவர் மேனகா ஆகியோர் கலந்து கொண்டனர். கூட்டத்தில், ஊரக வளர்ச்சி துறையில் பணியாற்றும் கிராம சுகாதார ஊக்குனர்களுக்கு, மாதந்தோறும் 5ம் தேதிக்குள் ஊதியம் வழங்க வேண்டும். பள்ளி தூய்மை பணியாளர்களுக்கு மாத ஊதியம் ₹5000 வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
தொழிலாளர் சங்க பேரவை கூட்டம்
previous post