சிவகங்கை, ஆக. 28: சிவகங்கை தாலுகா அலுவலகத்தில் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்பு திட்டத்தில் வேலைக்கான அட்டை வைத்திருக்கக் கூடிய அனைவருக்கும் வேலை வழங்க வேண்டும், வீட்டுமனை இல்லாதவர்களுக்கு வீட்டுமனைப் பட்டா வழங்க வேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி காத்திருப்பு போராட்டம் நடைபெற்றது.
சிவகங்கை தாலுகா அலுவலகத்தில் தமிழ்நாடு விவசாய தொழிலாளர் சங்கம் சார்பில் சிவகங்கை மாவட்டத்தில் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்பு திட்டத்தில் வேலைக்கான அட்டை வைத்திருக்கக் கூடிய அனைவருக்கும் வேலை வழங்க வேண்டும், வீட்டுமனை இல்லாதவர்களுக்கு வீட்டுமனைப் பட்டா வழங்க வேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி காத்திருக்கும் போராட்டம் நடைபெற்றது. மாவட்ட செயலாளர் பொன்னுச்சாமி, மாவட்ட துணைத் தலைவர் முத்துக்கருப்பன், ஒன்றிய பொருளாளர் மகாலிங்கம் ஆகியோர் தலைமை வகித்தனர்.
தமிழ்நாடு விவசாயிகள் சங்க மாவட்டத் தலைவர் வீரபாண்டி, மாவட்ட பொருளாளர் விஸ்வநாதன், மாற்றுத் திறனாளிகள் சங்க மாவட்ட செயலாளர் முத்துராமலிங்கபூபதி, ஒன்றிய பொருளாளர் மகாலிங்கம் ஆகியோர் போராட்டத்தை விளக்கி பேசினர். போராட்டத்தில் ஈடுபட்டவர்களிடம் தாசில்தார் சிவராமன் மற்றும் அலுவலர்கள் பேச்சுவார்த்தை நடத்தினர். இதையடுத்து போராட்டம் முடிவுக்கு வந்தது. இதில் 100க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.