Friday, February 23, 2024
Home » தொழிற்பள்ளி அங்கீகாரம் பெறுவது தொடர்பாக இணையதளம் மூலம் விண்ணப்பிக்கலாம்

தொழிற்பள்ளி அங்கீகாரம் பெறுவது தொடர்பாக இணையதளம் மூலம் விண்ணப்பிக்கலாம்

by Ranjith

 

புதுக்கோட்டை, ஜன.9: தொழிற்பள்ளி அங்கீகாரம் பெறுவது தொடர்பாக இணையதளம் மூலம் விண்ணப்பிக்கலாம் என்று புதுக்கோட்டை மாவட்ட கலெக்டர் தெரிவித்துள்ளார். இதுகுறித்து புதுக்கோட்டை மாவட்ட கலெக்டர் மெர்சி ரம்யா வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு வருமாறு:- 2024-2025ம் கல்வியாண்டிற்கு புதிய தொழிற்பள்ளிகள் துவங்குதல், அங்கீகாரம் புதுப்பித்தல், தொழிற் பள்ளிகளில் புதிய தொழிற் பிரிவுகள், தொழிற் பிரிவுகளில் கூடுதல் அலகுகள் துவங்குதல் ஆகியவற்றிற்கான விண்ணப்பங்கள் இணையதளம் மூலமாக வரவேற்கப்படுகின்றன.

இன்று முதல் 29.02.2024 வரை www.skilltaining.tn.gov.in < http://xn--4lcaa.xn--ini-nkja3ewak6ax6qqa.xn--n-7xe.xn--4kc9c4a.in/ >என்ற இணையதளம் மூலம் விண்ணப்பிக்கலாம். 2024-2025ம் கல்வியாண்டிற்கு அங்கீகாரம் பெற ஒரு தொழிற்பள்ளி ஒரு இணையதள விண்ணப்பம் சமர்ப்பித்தால் போதுமானது.
விண்ணப்பிக்கவுள்ள அனைத்து தொழிற்பிரிவுகள், கூடுதல் அலகுகளுக்கு தேவையான விவரங்கள் அனைத்தும் ஒரே விண்ணப்பத்தில் மட்டும் விண்ணப்பிக்க வேண்டும்.

விண்ணப்ப கட்டணம் மற்றும் ஆய்வுக்கட்டணம் ஆர்டிஜிஎஸ் மற்றும் நெப்ட் மூலம் செலுத்த வேண்டும். அனைத்து தொழிற் பிரிவுகளுக்கும் சேர்த்து விண்ணப்ப கட்டணம் ரூ.5,000 மற்றும் ஆய்வு கட்டணம் ரூ.8,000 செலுத்த வேண்டும். விண்ணப்பிக்க வேண்டிய கடைசி நாள் 29.02.2024. இதற்கு பின் பெறப்படும் விண்ணப்பங்கள் நிராகரிக்கப்படும். இவ்வாறு மாவட்ட கலெக்டர் மெர்சி ரம்யா தெரிவித்துள்ளார்.

You may also like

Leave a Comment

4 × two =

Dinakaran is a Tamil daily newspaper distributed in India. As of March 2010, Dinakaran is the largest Tamil daily newspaper in terms of net paid circulation, which was 1,235,220. In terms of total readership, which was 11.05 Lakhs as of May 2017, it is the second largest. Dinakaran is published from 12 centers in India namely Delhi, Mumbai, Chennai, Bengaluru, Madurai, Coimbatore, Trichy, Salem, Nagercoil, Vellore, Nellai and Pondicherry.

Address

@2023 – Designed and Developed by Sortd.Mobi