Sunday, February 25, 2024
Home » தொழிற்சங்க நிர்வாகிகள் 100 பேர் கைது

தொழிற்சங்க நிர்வாகிகள் 100 பேர் கைது

by Karthik Yash

சேலம், ஜன.11: சேலத்தில் சாலை மறியலில் ஈடுபட்ட தொழிற்சங்க நிர்வாகிகள் 100பேரை போலீசார் கைது செய்தனர். சேலம் பழைய பஸ் நிலையத்திற்கு நேற்று காலை வந்த டிரைவர்கள் மற்றும் கண்டக்டர்களிடம் வேலைக்கு செல்ல வேண்டாம் என அதிமுக தொழிற்சங்க நிர்வாகிகள் தெரிவித்தனர். அப்போது அங்கு பாதுகாப்பு பணியில் இருந்த போலீசார் அவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தி அங்கிருந்து அனுப்பி வைத்தனர். இதேபோல் புதிய பஸ் நிலையம் அருகேயுள்ள மெய்யனூர் பணிமனையை சிஐடியூ தொழிற்சங்க சேலம் மாவட்ட செயலாளர் உதயகுமார், தியாகராஜன் மற்றும் தொழிலாளர்கள், நிர்வாகிகள் என 100க்கும் மேற்பட்டோர் முற்றுகையிட்டனர்.பின்னர் அங்கிருந்து நடந்து வந்து புதிய பஸ் நிலையம் முன்பு உள்ள சாலையில் திடீரென மறியலில் ஈடுபட்டனர். அப்போது அவர்கள் கூறுகையில், ‘‘6 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டுள்ளோம். பஞ்சப்படி மட்டும் தற்போது நிறைவேற்றி தர வேண்டும். மற்ற கோரிக்கைகளை பொங்கல் பண்டிகைக்கு பின்னர் கூட நிறைவேற்றி கொடுக்கலாம். இதுபற்றி முதல்வர் பேச்சுவார்த்தை நடத்தி நடவடிக்கை எடுக்க வேண்டும்,’’ என்றனர். இதையடுத்து அங்கு பாதுகாப்பு பணியில் இருந்த போலீஸ் உதவி கமிஷனர் நிலவழகன் தலைமையிலான போலீசார், மறியலில் ஈடுபட்ட 100க்கும் மேற்பட்டோரை கைது செய்தனர்.

You may also like

Leave a Comment

fourteen − eleven =

Dinakaran is a Tamil daily newspaper distributed in India. As of March 2010, Dinakaran is the largest Tamil daily newspaper in terms of net paid circulation, which was 1,235,220. In terms of total readership, which was 11.05 Lakhs as of May 2017, it is the second largest. Dinakaran is published from 12 centers in India namely Delhi, Mumbai, Chennai, Bengaluru, Madurai, Coimbatore, Trichy, Salem, Nagercoil, Vellore, Nellai and Pondicherry.

Address

@2023 – Designed and Developed by Sortd.Mobi