பெரம்பலூர், ஆக. 30: பெரம்பலூரில் வேப்பந்தட்டை குறுவட்ட அளவிலான குடியரசு தின தடகள விளையாட்டுப் போட்டிகள் நடைபெற்றது. பெரம்பலூர் மாவட்ட விளையாட்டு மைதானத்தில் நேற்று (29 ம் தேதி) வியாழக் கிழமை, வேப்பந்தட்டை குறுவட்ட அளவில் உள்ள பள்ளிகளுக்கு இடையேயான குடியரசு தின தடகள விளையாட்டுப் போட்டிகள் நடைபெற்றது. இதில் 14 வயதுக்கு உட்பட்டோருக்கு, 17 வயதுக்கு உட்பட்டோருக்கு, 19 வயதுக்கு உட்பட்டோருக்கு என மூன்று பிரிவுகளில் நடத்தப்பட்ட தடகள விளையாட்டுப் போட்டிகளில், வேப்பந்தட்டை குறுவட்ட அளவில் உள்ள 20க்கும் மேற்பட்ட பள்ளிகளைச் சேர்ந்த 100க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் கலந்து கொண்டனர்.
போட்டிகளுக்கான தொடக்க விழாவிற்கு பெரம்பலூர் மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் சுகானந்தம் தலைமை வகித்து, தேசியக் கொடியைஏற்றிவைத்தார். வேப்பந்தட்டை அரசு மேல் நிலைப்பள்ளி தலைமை ஆசிரியை கலைமகள் வரவேற்றார். பெரம்பலூர் மாவட்ட விளையாட்டு மற்றும் இளைஞர் நலன் அலுவலர் புவனேஸ்வரி பெரம்பலூர் மாவட்ட உடற்கல்வி ஆய்வாளர் விஸ்வநாதன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
பெரம்பலூர் மாவட்டக் கல்விஅலுவலர் (தொடக்க கல்வி) அய்யாசாமி கலந்து கொண்டு ஒலிம்பிக் கொடியை ஏற்றிவைத்து போட்டிகளைத் தொடங்கி வைத்தார். பெரம்பலூர் மாவட்டக் கல்விஅலுவலர் (தனியார் பள்ளிகள்) லதா கலந்து கொண்டு வேப்பந் தட்டை குறுவட்ட அமைப்பு கொடியை ஏற்றி வைத்து வாழ்த்துரை பேசினார்.
தொடர்ந்து மாணவர்களுக்கான 3000 மீட்டர் ஓட்டம், உயரம் தண்டுதல், கோலுன்றித் தாண்டுதல், ஈட்டு எரிதல் ஆகிய போட்டிகள் நடை பெற்றது. மாணவிகளுக் கான அனைத்து தடகள விளையாட்டு போட்டிகளும் நடைபெற்றது. தடகள விளையாட்டு போட்டி களில் சாம்பியன் பட்டம் பெற்ற அனைவருக்கும், சாம்பியன் பட்டம் வென்ற தனி நபர்களுக்கும் சான்றி தழ்கள் வழங்கி பாராட்டி கௌரவிக்கப்பட்டனர். வேப்பந்தட்டை குறுவட்ட அளவிலான தடகளப் போட்டிகளுக்கான ஏற்பா டுகளை வேப்பந்தட்டை அரசு மேல்நிலைப்பள்ளி உடற்கல்வி ஆசிரியர்கள் விக்டோரியா மற்றும் சுப்பிரமணியன் ஆகியோர் செய்திருந்தனர்.
வீடு,வீடாக சரிபார்க்கும் பணி தீவிரம்
ஒரு லட்சம் கால்நடை எண்ணிக்கை அலகுகள் கொண்ட பகுதிக்கு ஒரு ஆம்புலன்ஸ் என்ற இலக்கினை கொண்டு கால்நடை மருத்துவ சிகிச்சை வாகனங்கள் வழங்கப்பட்டுள்ளது. இந்த வாகனங்கள் கால்நடை சிகிச்சைக்கு தேவைப்படும் அத்தியாவசிய மருந்துகள், உயிர் காக்கும் மருந்துகள், சிறிய ஆய்வுக்கூடம், தடுப்பூசிகளுக்கான குளிர்சாதனப்பெட்டி போன்ற நவீன வசதிகளுடன் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.