Monday, July 22, 2024
Home » தொப்பையை குறைக்க என்ன வழி?!

தொப்பையை குறைக்க என்ன வழி?!

by kannappan

நன்றி குங்குமம் டாக்டர்அழகு சார்ந்த பிரச்னையாக மட்டுமே பலரும் தொப்பை பற்றி நினைக்கிறார்கள். ஆனால், ஆரோக்கியம் சார்ந்த பல பிரச்னைகளின் ஆதாரமாக இருப்பது தொப்பைதான் என்கிறார்கள் மருத்துவர்கள். இதற்கு ஆண், பெண் என்ற பாரபட்சம் எதுவும் இல்லை. இன்னும் சொல்லப் போனால் ஆண்கள் கூட தொப்பையை எளிதில் எடுத்துக் கொள்கிறார்கள். பெண்களுக்கு அது பெரும் கவலையை உண்டாக்கிவிடுகிறது. இந்த தொப்பை உருவாவதன் காரணங்களை அறிந்தால் அதன் தீர்வுகளை நோக்கி நாம் செல்ல முடியும். இரைப்பை மற்றும் குடலியல் மருத்துவர் செந்தில்குமார் தொப்பை உருவாவதன் காரணிகள், அதற்கான சிகிச்சைகள் பற்றி கூறுகிறார்.‘‘நாம் சாப்பிட்ட உணவு சரியான முறையில் முதலில் ஜீரணமாக வேண்டும். அப்படி இல்லாத பட்சத்தில் அதன் எதிரொலியாக ஏற்படும் இரைப்பை அழற்சி, மலச்சிக்கல், வாயுத்தொல்லை போன்ற பல காரணங்களால் தொப்பை(Belly) ஏற்படுகிறது. தொப்பை என்பது வயிற்றின் உள்ளேயும் Abdominal wall எனப்படும் சதைப்பகுதியிலும் கொழுப்பு சேர்வதால் தொப்பை உண்டாகிறது. பெண்களுக்கு பிரசவத்திற்கு பின்பு வயிற்றின் சதைப்பகுதி (Abdominal wall muscles) விரிவடைந்து இளகிவிடுவதால் வயிறு முன் தள்ளி தொப்பை போல் தோற்றத்தைத் தரும். மதுபானங்கள், குளிர்பானங்கள், தவறான உணவு பழக்கங்கள், போதிய அளவு உடற்பயிற்சியின்மை, மன அழுத்தம் மற்றும் வயது அதிகரிப்பு ஆகியவை தொப்பை வர காரணங்களாக அமைகிறது. வயது அதிகமாகும் போது Basal metabolic Rate (BMR) குறைவதால் குறைவான அளவு உணவு உட்கொண்டாலும் கூட தொப்பை வர வாய்ப்புகள் அதிகம்.ஒரு சிலருக்கு மரபியல் காரணங்களாலும் தொப்பை வர வாய்ப்புகள் உள்ளது. அதிக அளவிலான கொழுப்புச்சத்து மற்றும் கார்போஹைட்ரேட் மற்றும் குறைவான அளவில் புரதம் எடுத்துக் கொள்வது போன்ற காரணிகளால் தொப்பை வர வாய்ப்புகள் அதிகமாக உள்ளது. கல்லீரலில் ஏற்பட்டிருக்கும் நோய் அறிகுறியாகவும் தொப்பை இருக்கிறது. அதிகப்படியான கொழுப்புகள் நிறைந்த உணவு, எண்ணெயில் பொரித்த உணவுகள் பீட்சா, பர்கர், ஃபாஸ்ட் ஃபுட் உணவுகள், டிரான்ஸ்ஃபேட் எனப்படும் கொழுப்பு நிறைந்த பேக்கரி உணவுகளும் தொப்பையை அதிகப்படுத்துகிறது. தூக்கமின்மை பிரச்சினைகளும் தொப்பைக்கு வழிவகைச் செய்கிறது.மேலும் Metabolic syndrome சர்க்கரை வியாதி, ரத்தக் கொதிப்பு (Hyper tension) ரத்தத்தில் கொழுப்பின் அளவு உயர்தல் (Dyslipidemia) மற்றும் இதய நோய்கள் ஆகிய பிரச்னைகள் தொப்பையின் காரணமாக ஏற்படுகிறது. இதற்கு Metabolic syndrome என பெயர்.வயிற்றில் உண்டாகும் கட்டிகள் (Uterus fibroid ovarian tumour) மற்றும் வயிற்றில் நீர் உற்பத்தியாகுதல் (Ascites) கல்லீரல் நோய்,; Tuberculosis (TB) மற்றும் புற்றுநோய் ஆகிய நோய்கள் உள்ளவர்களுக்கு தொப்பை வரலாம். இது நோயின் காரணமாக தொப்பை ஏற்படுவதாகும். எனவே, கவனம் தேவை. தொப்பை வராமல் தடுக்க எடையை கட்டுப்பாட்டில் வைத்துக் கொள்ள வேண்டும். இதற்கு மருத்துவரீதியாக Weight in kg/ Height in m2 எனப்படும் விதியை உபயோகப்படுத்தி BMI எனப்படும் Body mass Index கணக்கிடலாம். அவ்வாறு கணக்கிடும்போது 18 kg/m2 25 kg/m2 க்குள் உள்ளவாறு நமது எடையை வைத்துக்கொள்ளும் போது தொப்பை வராமல் தவிர்த்திடலாம்.* தொப்பை வராமல் தடுக்க…சமச்சீரான உணவு முறையைப் பின்பற்றுவதோடு சர்க்கரை, கொழுப்பு மற்றும் மாவுச்சத்து நிறைந்த உணவுகளைத் தவிர்க்க வேண்டும். அதிகளவிலான காய்கறிகள், கீரை வகைகள், புரதச்சத்துள்ள உணவுகளை சேர்த்துக் கொள்ள வேண்டும்.மதுபானங்களில் சர்க்கரை அதிகளவில் கலந்திருக்கும். எனவே, மதுப்பழக்கம் மற்றும் புகைப்பழக்கம் உள்ளவர்களுக்கு உடல் எடை அதிகரித்து தொப்பை ஏற்படும் வாய்ப்பு அதிகம். இது பல பிரச்னைகளுக்கு கொண்டுவிடுவதால் இந்த தீய பழக்கங்களை முற்றிலும் தவிர்க்க வேண்டும்.சோம்பலான வாழ்க்கைமுறையைத் தவிர்த்து சூரிய ஒளி படுமாறு உடற்பயிற்சி மேற்கொள்ள வேண்டும். மன அழுத்தம் மற்றும் தூக்கமின்மை பிரச்னைகள் தொப்பை உண்டாவதற்கு முக்கிய காரணமாக இருக்கிறது. தற்போது உள்ள சூழலில் தூக்கமின்மை, மன அழுத்தம் தீவிரமான பிரச்னையாக இருப்பதால் கவனம் அவசியம்.* சிகிச்சை முறைகள்தொப்பையுடன் BMI 37.5 Kg/m2 இருந்தாலோ அல்லது தொப்பை சர்க்கரை. கொழுப்பு ரத்த அழுத்தம் ஆகியவற்றுடன் சேர்ந்து இருக்கும்போது BMI 32.5 kg/ m2 க்கும் மேல் இருந்தால் Labral cubic podiatric surgery எனும் சிகிச்சை முறையில் தொப்பையை முற்றிலும் குறைக்க முடியும். Bariatric Surgery சிகிச்சை முறைப்படி எடையைக் குறைத்தும் தொப்பை வராமல் தடுக்கலாம். Liposuction எனப்படும் கொழுப்பை உறிஞ்சி எடுக்கும் சிகிச்சை மூலமும் தொப்பையைக் குறைக்கலாம். பெண்களுக்கு ஏற்படும் மகப்பேறுக்கு பின்பான தொப்பையை Abdominoplast அறுவை சிகிச்சை மூலம் சரி செய்யலாம்.இவற்றையும் நினைவில் கொள்ளுங்கள்வெந்நீர் அடிக்கடி பருக வேண்டும். எளிமையான உணவுகளை எடுத்துக் கொள்ள வேண்டும். காய்கறிகள் நிறைந்த சூப் சேர்த்துக் கொள்ளலாம். உடல் உழைப்பு இன்றைய காலகட்டத்தில் பெரிதும் குறைந்திருப்பதால் தொப்பை வருவதற்கான சாத்தியங்கள் எல்லோருக்குமே அதிகம். அதனால் உடற்பயிற்சிகளை எல்லோரும் பின்பற்ற வேண்டும். பசி இல்லாத நேரத்தில் சாப்பிடுவது, பசித்தும் சாப்பிடாமல் இருப்பது இந்த இரண்டுமே தவறுதான். இந்தக் குறையையும் நிவர்த்தி செய்ய வேண்டும். தூக்கமின்மையும் தொப்பையை உருவாக்குவதில் முக்கியப் பங்கு வகிக்கிறது. அதேபோல், சாப்பிட்டவுடன் தூங்குவதையும் தவிர்க்க வேண்டும்.;– ராஜேஸ்வரி

You may also like

Leave a Comment

thirteen − 10 =

Dinakaran is a Tamil daily newspaper distributed in India. As of March 2010, Dinakaran is the largest Tamil daily newspaper in terms of net paid circulation, which was 1,235,220. In terms of total readership, which was 11.05 Lakhs as of May 2017, it is the second largest. Dinakaran is published from 12 centers in India namely Delhi, Mumbai, Chennai, Bengaluru, Madurai, Coimbatore, Trichy, Salem, Nagercoil, Vellore, Nellai and Pondicherry.

Address

@2024-2025 – Designed and Developed by Sortd.Mobi