தொண்டி, மே 19: தொண்டி பேரூராட்சிக்கு உட்பட்ட பகுதியில் புதிதாக கட்டப்படும் கட்டிடங்கள் பாதைகளை ஆக்கிரமிப்பு செய்யப்படுவதாக புகார் எழுந்துள்ளது. இதனால் பேருராட்சி நிர்வாகம் உரிய நடவடிக்கை எடுக்க பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். தொண்டி பேரூராட்சிக்கு உட்பட்ட அனைத்து தெருவிலும் ஏராளமான கட்டிடங்கள் கட்டப்படுகிறது. பேரூராட்சி அனுமதியுடன் கட்டப்படும் கட்டிடம் சில இடங்களில் பாதையை ஆக்கிரமிப்பு செய்து கட்டப்படுவதாக கூறப்படுகிறது.
கடந்த காலங்களில் இரு வாகனங்கள் சென்ற பாதையில் தற்போது ஒரு வாகனம் செல்ல கூட சிரமமாக உள்ளதாக புகார் கூறுகின்றனர். பேரூராட்சி அனுமதி வழங்குவதோடு கட்டுமானங்களை கண்காணிக்கவும் கோரிக்கை விடுத்துள்ளனர். சமூக ஆர்வலர்கள் கூறியது, குறிப்பிட்ட அளவிற்கு மட்டுமே கட்டிடம் கட்ட அனுமதி வழங்கப்படும். தெருச் சாலைகளை ஆக்கிரமிப்பு செய்து பாதைகளை அடைத்து கட்டுவதால் ஆம்புலன்ஸ், ஆட்டோ உள்ளிட்ட வாகனங்கள் செல்ல சிரமப்பட வேண்டியுள்து. பேரூராட்சி நிர்வாகம் கூடுதல் கவனம் செலுத்தி இதை தவிர்க்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றனர்.