தொண்டி, அக். 28: தொண்டி அருகே உள்ள நம்புதாளையில் தவ்ஹித் ஜமாத் சார்பில் மார்க்க விளக்க தெருமுனை கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்திற்கு மாவட்டத் துணைத் தலைவர் முகவை அப்பாஸ் தலைமை மாவட்டச் செயலாளர் செய்யது நெய்னா, மாவட்டத் துணைச் செயலாளர்கள் மதுரை சேக், யாசிர் அரபாத் ஆகியோர் முன்னிலை வகித்தனர். சொர்க்கத்தை தடை செய்யும் இணைவைப்புகள் என்ற தலைப்பில் மாநிலச் செயலாளர் சையது அலி, இஸ்லாத்தில் முழுமையாக நுழைந்து விடுங்கள் என்ற தலைப்பில் அப்துஸ்ஸமது ஆலிம் பேசினர். நம்புதாளையில் கொசு தொல்லை அதிகமாக இருப்பதால் ஊர் முழுவதும் கொசு மருந்து அடிக்க வேண்டும் என்றும். நம்புதாளை துணை ஆரம்ப சுகாதார நிலையத்தில் முறையாக செவிலியர்கள் நியமிக்கப்பட வேண்டும் என்றும். இஸ்ரேலின் கொடுமைகளை தடுத்து நிறுத்த நடவடிக்கை எடுக்க கோருவது உள்ளிட்ட பல்வேறு தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. நம்புதாளை கிளைத் தலைவர் செய்யது அபுதாஹிர், செயலாளர் முகம்மது ராபி, பொருளாளர் முபாரக் அலி, துணைத் தலைவர் ரியாஸ், துணைச் செயலாளர் ஹமீது மறைக்கா மற்றும் ஆண்கள், பெண்கள், மாணவ, மாணவிகள் என ஏராளமானோர் கலந்து கொண்டனர்.