தொண்டி, ஜூலை 16: தொண்டி அருகே உள்ள சோலியக்குடி கடற்கரையில் இறந்து அழுகிய நிலையில் டால்பின் கரை ஒதுங்கியது. தொண்டி அருகே உள்ள சோலியக்குடி கடற்கரையில் நேற்று சுமார் 80 கிலோ எடையுள்ள டால்பின் மீன் ஒன்று இறந்து அழுகிய நிலையில் கரை ஒதுங்கியுள்ளது. இதை பார்த்த மீனவர்கள் வனத்துறை அதிகாரிகளுக்கு தகவல் கொடுத்துள்ளனர். டால்பினை கைப்பற்றிய வனத்துறையினர் மருத்துவர் உதவியுடன் உடற்கூராய்வு செய்து புதைத்தனர். மேலும் கடந்த 10 நாளுக்கு முன்பு கப்பல் அல்லது பாறையில் மோதி இறந்திருக்கலாம். குடல் வெளியாகி அழுகிய நிலையில் உள்ளது என்றனர்.