சென்னை: அதிமுக-வை தொண்டர்களின் இயக்கமாக எம்.ஜி.ஆர். நடத்தி வந்தார், அதற்கு பிறகு ஜெயலலிதா சிறப்பாக கட்சியை வழிநடத்தி வந்தார் என மாவட்ட செயலாளர்கள் கூட்டத்தில் ஓ.பன்னீர்செல்வம் தெரிவித்துள்ளார். அதிமுக தலைமை பதவியில் இருப்போரை நீக்கும் அதிகாரம் பொதுக்குழு உறுப்பினர்களிடம் இருக்க கூடாது என்பதில் உறுதியாக இருந்தார் எம்ஜிஆர். தொண்டர்கள் சேர்ந்து தலைமை பதவியை தேர்வு செய்ய வேண்டும் என்று அதிமுகவில் சட்ட விதியை எம்.ஜி.ஆர். கொண்டு வந்தார். ஜெயலலிதா மறைவுக்கு பிறகு தொண்டர்கள் விருப்பப்படியே ஒருங்கிணைப்பாளர்கள் பதவிகள் உருவாக்கப்பட்டன. தமிழ்நாடு அரசியலில் தனிப்பட்ட இயக்கமாக அதிமுகவை உருவாக்கியவர்கள் எம்ஜிஆர், ஜெயலலிதா என கூறினார். …