ஓமலூர், ஜூன் 5: ஓமலூர் வட்டாரத்தில் மழை காரணமாக, மாம்பழ விலை குறைந்த நிலையிலும், விற்பனை இல்லாததால், குப்பையில் கொட்டும் அவல நிலை உருவாகியுள்ளது. ஓமலூர், காடையாம்பட்டி, தாரமங்கலம் ஆகிய வட்டார கிராமங்களில், சுமார் 500 ஏக்கர் பரப்பில் மாம்பழங்கள் சாகுபடி செய்யப்பட்டுள்ளது. தற்போது மா சீசன் துவங்கி, காய்கள் பறிக்கப்பட்டு விற்பனைக்கு அனுப்பி வருகின்றனர். இதனிடையே கோடை மழை பெய்து, தற்போது தென்மேற்கு பருவமழையும் பெய்ய துவங்கியதால், மாம்பழ விற்பனை வெகுவாக குறைந்துள்ளது. இதனால், கிலோ ரூ.100 முதல் ரூ.250 வரை விற்ற மாம்பழங்கள் தற்போது கிலோ ரூ.30க்கு விற்பனை செய்யப்படுகிறது. விற்பனை ஆகாமல் தினமும் 50 கிலோ பழம் வரை வீணாக கீழே கொட்டப்பட்டு வருகிறது. இதனால், வியாபாரிகள் குறைந்த விலைக்கு கேட்பதால், பெரும்பாலான விவசாயிகள் நேரடியாக விற்பனையை துவங்கியுள்ளனர்.
தொடர் மழையால் மாம்பழ விற்பனை சரிவு
0
previous post