போச்சம்பள்ளி, மே 20: போச்சம்பள்ளி பகுதியில் தொடர் மழையால், பாம்புகள் வீடுகளுக்குள் படையெடுப்பதால் மக்கள் பீதியடைந்துள்ளனர். கிருஷ்ணகிரி மாவட்டம் போச்சம்பள்ளி சுற்றுவட்டார பகுதிகளில் தொடர் மழை பெய்து வருகிறது. கிராமங்களில் வீடுகள், வீடுகளை சுற்றியுள்ள புதர்மண்டிய பகுதிகளுக்கு பாம்புகள் படையெடுத்து வருகிறது. இதனால், கிராம மக்கள் பீதிக்குள்ளாகியுள்ளனர். இதுகுறுத்து போச்சம்பள்ளி தீயணைப்பு நிலைய அலுவலர்கள் கூறுகையில், வீட்டிற்குள் பாம்பு புகுந்தால், அதனை துன்புறுத்தாமல், உனடியாக தீயணைப்பு மற்றும் வனத்துறையினருக்கு தகவல் தெரிவிக்க வேண்டும். மாலை நேரத்தில் வீட்டில் முன் மற்றும் பின் பக்க கதவுகளை அதிக நேரம் திறந்து வைத்திருக்க கூடாது. வீடு மற்றும் கடைகளுக்குள் பாம்பு புகுந்தால் உடனடியாக 101, 112 மற்றும் 04341 252301 என்ற எண்ணில் தொடர்பு கொண்டு தகவல் தெரிவிக்கவும். நாங்கள் உடனடியாக சம்பவ இடத்திற்கு வந்து பாம்புகளை பிடிக்க நடவடிக்கை எடுப்போம் என்றனர்.
தொடர் மழையால் ஊருக்குள் படையெடுக்கும் பாம்புகள்
0