பாலக்காடு, ஜூன் 19: பாலக்காடு மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக பெய்து வரும் கனமழை காரணமாக பல்வேறு இடங்களில் பழமைவாய்ந்த வீடுகள் இடிந்து விழுந்து சேதமடைந்தன.
ஒத்தப்பாலம் தாலுகா அனங்கநடி பனமண்ணாவை சேர்ந்தவர் உஷா. இவரது பழைய ஓட்டு வீடு முழுமையாக சேதமடைந்தது. வீடு பழுதடைந்திருப்பதால் இங்கு வசித்த வந்த உஷா குடும்பத்தினர், அருகேயுள்ள குடிசை வீட்டில் தங்கியிருந்ததால் விபத்து ஏற்படாமல் தவிர்க்கப்பட்டது.
பழுதடைந்த வீட்டில் இருந்து மின் இணைப்பு ஷெட்டிற்கு எடுக்கப்பட்டது.
தற்போது பெய்த மழை காரணமாக வீடும் இடிந்து முழுமையாக சேதமடைந்து மின் இணைப்பும் துண்டிக்கப்பட்டது. இதனால் இந்த குடும்பத்தினர் இருட்டில் வாழ்க்கையை கழித்து வருகின்றனர். பாலக்காடு மாவட்டம் சித்தூர் தாலுகா வண்டித்தாவளம் அருகே நன்னியோட்டில் பலத்த காற்றுடன்க்கூடிய கன மழையால் அரசு பள்ளிக்கூடம் அருகே இருந்த மரத்தின் கிளைகள் ஒடிந்து மின்சார கம்பிகளின் மீது விழுந்து மின்சாரம் துண்டிக்கப்பட்டன. இதனால் நன்னியோடு சுற்றுவட்டார பகுதிகள், மின்சார விநியோகம் துண்டித்து இருட்டில் மூழ்கியது.