சேலம், நவ.14:சேலம் நாலெட்ஜ் பொறியியல் கல்லூரிக்கு, ஸ்டார்ப் தமிழ்நாடு அமைப்பின் “தொடக்கநிலை தொழில் வளர் காப்பகம்” தொடங்க சென்னை ஐ.ஐ.டி ரிசர்ச் பார்க் வளாகத்தில நடைபெற்ற “செய்க புதுமை” நிகழ்ச்சியில் அதிகாரப்பூர்வ ஆணையை தமிழக துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் வழங்கினார். இந்த அதிகாரப்பூர்வ ஆணையினை நாலெட்ஜ் பொறியியல் கல்லூரி அறக்கட்டளையின் தலைவரும், முதல்வருமான சீனிவாசன் மற்றும் துணை முதல்வருமான விசாகவேல் ஆகியோர் பெற்று கொண்டனர். ஸ்டார்ட் அப் தமிழ்நாடு அமைப்பின் “தொடக்கநிலை தொழில் வளர் காப்பகம்” கல்லூரி வளாகத்தில் அமைக்க ஆணை வழங்கிய தமிழக துணை முதலமைச்சர் மற்றும் தமிழக அரசின் பல்வேறு துறை அதிகாரிகளுக்கும் நாலெட்ஜ் பொறியியல் கல்லூரி அறக்கட்டளையின் செயலாளர் குமார், பொருளாளர் சுரேஷ்குமார் ஆகியோர் நன்றி தெரிவித்தனர்.
தொடக்கநிலை தொழில் வளர் காப்பகம் தொடங்க ஆணை
0