திருத்துறைப்பூண்டி, மே 30: திருத்துறைப்பூண்டி அருகே மேட்டுப்பாளையம் நாளாநல்லூர் கிராமத்தில் வசித்து வருபவர் விவேக் வயது 34 இவருக்கு பரணிதா 4வயதில் மகள் உள்ளார் அதனுடைய இவர்கள் முப்பது ஆண்டுகளுக்கு முன்பு கட்டப்பட்ட தொகுப்பு வீட்டில் வசித்து வருகின்றனர். இந்த நிலையில் நேற்று முன்தினம் மாலை வீட்டில் யாரும் இல்லாத நிலையில் அவரது மகள் பரணிதா வீட்டில் விளையாடிக் கொண்டிருந்தபோது திடீரென வீட்டின் மேற்கூறையில் உள்ள சிமெண்ட் காரைகள் பெயர்ந்து விழுந்ததில் தலையில் பலத்த காயம் ஏற்பட்டுள்ளது.
சத்தம் கேட்டு ஓடி வந்து பெற்றோர் பார்த்தபோது தலையில் பலத்த காயம் ஏற்பட்டிருந்தது உடனடியாக திருத்துறைப்பூண்டி அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக கொண்டு சேர்த்தனர் பலத்த காயம் ஏற்பட்டதால் பரணிதாவை மேல்சிகிச்சைக்காக திருவாரூர் அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். 30 ஆண்டுகளுக்கு முன்பு கட்டப்பட்ட தொகுப்பு வீடுகளை இடித்துவிட்டு புதிதாக வீடுகள் கட்டி தர வேண்டுமென அப்பகுதி இப்போது மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.