திருவட்டார், ஜூன் 28: திருவட்டார் அருகே குளிச்சிமாவிளை பகுதியை சேர்ந்தவர் டேனியல். தொழிலாளி. இவரது 17 வயது மகள் பிளஸ் 2 முடித்து விட்டு தையல் வகுப்புக்கு சென்று வருகிறார். இந்த நிலையில் நேற்று காலை வழக்கம்போல தையல் வகுப்புக்கு சென்ற சிறுமி மாலையில் வீடு திரும்ப வில்லை.
இதனால் அதிர்ச்சியடைந்த டேனியல் தனது மகளின் செல்போன் எண்ணை தொடர்பு கொண்டார். ஆனால் செல்போன் சுவிட்ச் ஆப் செய்யப்பட்டிருந்தது. இதனால் அதிர்ச்சியடைந்த டேனியல் தனது மகளின் நண்பர்கள், உறவினர்கள் வீடுகளில் தேடினார். ஆனால் எந்த தகவலும் கிடைக்க வில்லை. இதுகுறித்து டேனியல் திருவட்டார் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார். போலீசார் வழக்குப்பதிவு செய்து மாயமான சிறுமியை தேடி வருகிறார்கள்.