பந்தலூர், ஜூலை 7: பந்தலூர் அருகே உப்பட்டியில் தையல் பயிற்சி முடித்த பெண்களுக்கு சான்றிதழ் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.நீலகிரி மாவட்டம், உப்பட்டியில் ஷாலோம் தையல் பயிற்சி மையத்தில் பயிற்சி முடித்த பெண்களுக்கு சான்றிதழ் வழங்கும் நிகழ்ச்சி நேற்று நடந்தது. நிகழ்ச்சிக்கு ஷாலோம் சாரிடபிள் டிரஸ்ட் இயக்குநர் விஜயன் சாமுவேல் தலைமை வகித்து பேசுகையில், ‘‘கிராமப்புற பெண்கள் முன்னேற்றத்திற்காக தொடர்ந்து பல்வேறு சிரமத்திற்கு மத்தியில் தையல் பயிற்சி மையத்தை நடத்தி வருகிறோம்.
பெண்கள் இதனை முறையாக பயன்படுத்திக் கொள்ள வேண்டும்’’ என்றார். பயிற்சி மைய பயிற்றுனர் சுலோச்சனா வரவேற்று பேசினார். கூடலூர் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரி துணை பேராசிரியர்கள் மகேஷ்வரன், அமுதேஷ்வரன் ஆகியோர் சிறப்பு அழைப்பாளராக பயிற்சி முடித்த பெண்களுக்கு சான்றிதழ்கள் வழங்கி, பெண்கள் சுயதொழில் செய்து தங்கள் குடும்பத்திற்கு வருமானம் ஈட்ட எப்போதும் உதவியாக இருக்கும். இந்த வாய்ப்புகளை பயன்படுத்தி கொள்ள வேண்டும் என்றனர். நிகழ்ச்சியில், ஓய்வுபெற்ற ஆசிரியர் சமது மற்றும் தையல் பயிற்சி முடித்த பெண்கள் கலந்து கொண்டனர்.