Thursday, June 8, 2023
Home » தேவையற்ற ரோமங்கள்

தேவையற்ற ரோமங்கள்

by kannappan

நன்றி குங்குமம் டாக்டர்முடி கொட்டுவதற்கான அல்லது வளராததற்கான காரணங்களைப் பற்றி இதற்கு முந்தைய அத்தியாயங்களில் பார்த்தோம். எந்த அளவுக்கு கூந்தல் வளர்ச்சியின்மை மனதுக்குத் தொந்தரவானதாக இருக்கிறதோ, அதேபோல் தேவையில்லாத இடங்களில் ரோமங்கள் வளரும்போதும் மிகப்பெரிய தொந்தரவைக் கொடுக்கக் கூடியதாக மாறிவிடுகிறது. குறிப்பாக, பெண்களுக்கு இப்பிரச்னை ஏற்படும்போது, மனதளவில் அவர்கள் பெரிதும் பாதிப்படைகின்றனர். தேவையற்ற ரோம வளர்ச்சியை Hirsutism என்று கூறுகிறோம். உலகம் முழுவதும் 5 முதல் 10% வரையிலான பெண்கள் இப்பிரச்னையால் பாதிக்கப்படுகிறார்கள் என்கிறது ஒரு புள்ளிவிபரம்.உடலின் மறைவிடங்களில் முடி வளர்வது இயல்பானது என்பதால் அது Hirsutism வகையில் அடங்காது. ஆண்களைப் போல மீசை, தாடி, கிருதா போன்றவை பெண்களுக்கும் இருந்தால் அதுதான் Hirsutism என்று குறிப்பிடப்படும்.இவ்வாறு தேவையில்லாத இடத்தில் முடி முளைத்தால், அதனை லேசாக எடுத்துக் கொள்ளாமல் மருத்துவரின் உதவியை நாட வேண்டும். ஆண்களின் உடலில் சுரக்கும் டெஸ்டோஸ்டீரான் என்ற ஹார்மோன், பெண்களின் உடலிலும் சிறிதளவு சுரக்கும். இந்த ஹார்மோன் அளவு அதிகமானாலோ அல்லது இருக்கும் சிறிதளவிற்கும் பெண்களின் உடலில் உள்ள செல்களின் Sensitivity அதிகமானாலோ இந்நிலை ஏற்படலாம். ஆண் ஹார்மோனான Testosterone, அட்ரினல் சுரப்பியில் இருந்தோ அல்லது ஓவரிக்களிலிருந்தோ அதிகம் சுரக்கலாம். Ovaries-ல் நீர் கட்டிகள் PCOD(Polycystic Ovarian Disease) இருந்தாலும் Hirsutism ஏற்படலாம். மாதவிடாய் கோளாறுகள், முகத்தில் அதிகமாக எண்ணெய் சுரப்பது, நிறைய பருக்கள் தோன்றுவது போன்ற பிரச்னைகளும் இதனோடு சேர்ந்து வரலாம். ஆகையால், முதலில் Polycystic Ovarian Disease-க்கு முதலில் சிகிச்சை மேற்கொள்வது அவசியம். அதற்கான சிகிச்சை செய்வதை விட்டு, வெறும் முடியை குறைப்பதற்காக செய்யப்படும் முயற்சிகள் பலனளிக்காது. சில நேரங்களில் Overies-ல் கட்டிகள் இருந்தாலும் இது வரலாம். அட்ரினல் சுரப்பியில் கட்டிகள் இருந்தாலும் இந்தப் பிரச்னை ஏற்படலாம்.அதிக உடல் பருமன் உள்ளவர்களுக்கு Insulin Resistance என்ற பிரச்னை ஏற்படலாம். PCOD-ஆல் பாதிக்கப்பட்டவர்களுக்கு உடல் பருமன் ஏற்பட்டு அவர்களுக்கும் Insulin Resistance ஏற்படலாம். Insulin resistance என்பது என்னவென்றால், நாம் சாப்பிட்ட பின் உடலில் சர்க்கரை அளவை கட்டுக்குள் வைக்க இன்சுலின் என்ற ஹார்மோன் சுரக்கும். இது வழக்கமாக சுரந்தால் சர்க்கரை கட்டுக்குள் வராமல் அதிகம் சுரந்தால் மட்டும் சர்க்கரை கட்டுக்குள் வந்தால் அதுவே Insulin resistance. இப்பிரச்னை உள்ளவர்களுக்கு உடலில் Testosterone அளவும் அதிகரிக்கலாம். ஆகையால், உடல் எடையைக் குறைக்க வேண்டியது அவசியம். Testosterone ஹார்மோன் அளவு நார்மலாக இருந்தும் 20 சதவீதம் பேர் Idiopathic Hirsutism என்ற பிரச்னையால்; பாதிக்கப்படுகிறார்கள். அதாவது அவர்களுக்கு கருப்பையிலும், அட்ரினல் சுரப்பியிலும் எந்த பிரச்னையும் இருக்காது. Testosterone அளவும் நார்மலாகத்தான் இருக்கும். மாதவிடாய் நிற்கும் மெனோபாஸ் காலகட்டத்தில் இருக்கும் பெண்களுக்கு Estrogen அளவு குறைந்து Testosterone அளவு அதிகமாவதால் சிலருக்கு Hirsutism ஏற்படலாம்.மேற்கூறிய காரணங்களைக் கண்டறிய, Serum Testosterone அளவு, Dehydroepiandrosterone Sulfate (DHEAS) அளவு, 17-Hydrony Progesterone; அளவு, 24 மணி நேர Urinary Cortisol அளவு, LH/ FSH அளவு, Prolactin அளவு, Serum TSH அளவு, அல்ட்ரா சவுண்ட் Abdomen, Pelvis மற்றும் MRI (or) CT – Adrenal Region போன்ற சோதனைகள் செய்ய வேண்டியிருக்கலாம். ‘ஹிர்ஸிட்டிஸம்’ உள்ள பெண்கள் பலர் ஷேவிங், வாக்ஸிங், கிரீம், ரிமூவல், திரட்டிங் போன்றவற்றை செய்து கொள்வார்கள். இதற்கு நிரந்தர தீர்வு ஏதும் உள்ளதா என்றால், இல்லை என்றுதான் சொல்ல வேண்டும். பல சிகிச்சை முறைகள் இருந்தாலும், உடலினுள் தொடர்ந்து அதிக Testosterone சுரந்து கொண்டேயிருந்தால் அதைச் சமாளிப்பது கொஞ்சம் கடினம்தான்.PCOD- ஆல் பாதிக்கப்பட்டவர்களுக்கு அதற்குரிய சிகிச்சைமுறை செய்து கொள்வது அவசியம். உடலின் மேற்பகுதி பருமனாக இருப்பவர்களுக்கு, Testosterone ஹார்மோனை Bind செய்யும் Sex Hormone Binding Globulin அளவு குறைவாக இருக்கும். அதனால் ரத்தத்தில் Testosterone அளவு அதிகமாகிவிடும். அதனால் உடல் எடையை சரியாக பராமரிப்பதும், தொப்பை விழாமல் பார்த்துக்கொள்வதும் அவசியம். இந்த ஹார்மோன் கோளாறுகளை சரிசெய்ய கர்ப்பத்தடை மாத்திரைகள், Spironolactone அல்லது Cyproteron Acetate மாத்திரைகளும் மருத்துவரின் ஆலோசனைப்படி உட்கொள்ள வேண்டியிருக்கலாம். இதைத்தவிர, Finasteride, Gnrh Agonists மற்றும் Gluco Corticoid மாத்திரைகளையும் மருத்துவர் தேவைக்கேற்ப பரிந்துரைப்பார்.Eflornithine Hydrochloride என்ற க்ரீமை, காலை மற்றும் இரவு என இருவேளைகளிலும், முடி அதிகமாக முளைக்கும் இடங்களில் தடவி வருவதால், முடி வளரும் வேகம் 6-8 வாரங்களில் படிப்படியாக குறையும்.Electrolysis என்ற சிகிச்சையும் உபயோகம் தரக்கூடியது. இச்சிகிச்சையில், முடியின் வேர் பகுதி சிறிதளவு கரண்ட் கொண்டு அழிக்கப்படும். இது ஒரு Blind Procedure. ஆகையால் இந்த சிகிச்சை முறையில் 15-50% மட்டுமே வெற்றி கிடைக்கும்.லேசர் சிகிச்சையும் முக்கியப் பங்களிக்கிறது. Diode Laser, Alexandrite Laser, Ruby Laser மற்றும் Lond Pulsed ND Yag Laser போன்ற லேசர்கள் உபயோகப்படுத்தப்படுகின்றன. லேசர்கள் Selective Photothermolysis என்ற கோட்பாட்டின்படி வேலை செய்கின்றன. இதில் வளரும் பருவத்தில் அதாவது Anagen Phase-ல் உள்ள முடியின் வேர் கால்களில் மட்டும் லேசர் வேலை செய்யும். ஆகையால், ஆரம்பத்தில் லேசரை பல தடவை செய்வதால் மட்டுமே 80% முடியின் வளர்ச்சியைக் குறைக்கலாம். இதில் நீங்கள் நன்கு புரிந்துகொள்ள வேண்டியது என்னவென்றால், Laser Hair Removal என்பதைவிட Laser Hair Reduction-தான் சாத்தியம். அதாவது, முற்றிலுமாக முடி வளர்ச்சியை நிறுத்த முடியாது. முடியின் விட்டத்தை குறைக்கலாம். முடியின் வளர்ச்சியின் வேகத்தை குறைக்கலாம். இந்த நிலையை தக்க வைத்துக்கொள்ள வருடத்திற்கு இரண்டு, மூன்று தடவையாவது லேசர் சிகிச்சையை தொடர வேண்டியிருக்கும்.லேசர் சிகிச்சை செய்வதற்கு நல்ல கருமை நிற முடி உள்ளவர்களாக இருப்பது பலன் தரும். சிவப்பு நிறமாக இருந்தால் கூடுதலாக சிகிச்சைக்கு உதவும். இதேபோல் யாருக்கு ஹார்மோன் அளவு சரியாக இருந்து I diopathic Hirsutism உள்ளதோ அவர்களுக்கு சிகிச்சையில் வெற்றி வாய்ப்பு அதிகம்!( ரசிக்கலாம்… பராமரிக்கலாம்… )

You might be intrested in

Dinakaran is a Tamil daily newspaper distributed in India. As of March 2010, Dinakaran is the largest Tamil daily newspaper in terms of net paid circulation, which was 1,235,220. In terms of total readership, which was 11.05 Lakhs as of May 2017, it is the second largest. Dinakaran is published from 12 centers in India namely Delhi, Mumbai, Chennai, Bengaluru, Madurai, Coimbatore, Trichy, Salem, Nagercoil, Vellore, Nellai and Pondicherry.

Address

@2023 – Designed and Developed by Sortd.Mobi