தேவாரம், ஜூன் 30: தேவாரம் மலையடிவாரத்தில் மக்காச்சோள விவசாயத்தை ஊக்குவிக்க வேளாண்மைத் துறை அதிகாரிகள் முன்வர வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர். தேனி மாவட்டத்தில் கோம்பை, அனுமந்தன்பட்டி, பண்ணைப்புரம், தேவாரம், போடி பகுதிகளில் சுமார் 25 ஆயிரம் ஏக்கர் பரப்பில் நவதானிய விவசாயங்கள் நடந்தன. இதில் சுமார் 5 ஆயிரம் ஏக்கர் வரை மக்காச்சோளம் விவசாயம் நடந்தது.
இடைக்காலங்களில் மழை இல்லாத நிலையில் இதன் விவசாயம் சுருங்கியது. காரணம் அனைத்து கண்மாய்கள், குளங்களிலும் மழை இல்லாத நிலையில் வறண்டன. மக்காச்சோள விவசாயத்தை பொறுத்தவரை மழை மிகவும் அவசியம். மக்காச்சோள விவசாயத்தின் பரப்பு குறைந்தாலும், இதனை ஊக்குவிக்க எந்த நடவடிக்கையும் எடுக்காத நிலையில், விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர். இதனை ஊக்குவிக்க வேளாண்மைத்துறை உரிய நடவடிக்கை எடுக்க முன்வரவேண்டும்.