தேவாரம், மே 19: கம்பம் பள்ளத்தாக்கில், தேவாரம், கோம்பை, என திரும்பிய இடமெல்லாம் தென்னை மரங்கள் வானில் உயர்ந்து நிற்கிறது. தமிழகத்தில் பொள்ளாச்சிக்கு, அடுத்தபடியாக கம்பம் பள்ளதாக்கு தென்னையில் முன்னணி பெற்று வருகிறது. தென்னையை பிள்ளை போல் காத்துவந்த காலம் போய் இன்று தென்னைக்கு ஏற்பட்டுள்ள பெரும் பின்னடைவு விவசாயிகளுக்கு பெரும் ஏமாற்றத்தை ஏற்படுத்தி வருகிறது. மேலும், தேவாரம் பகுதிகளில் கயிறு மில்கள் பெருமளவில் மூடப்பட்டுள்ளதால், தொழிலாளர்கள் வேலை இழந்துள்ளனர். கம்பம் பள்ளதாக்கில் தென்னை விவசாயம் நலிவடைந்து வருகிறது.