தேவாரம், அக். 25: தேவாரம் பஸ் நிலையத்தில் இருந்து, தினமும் போடி, தேவாரம், தேனி, கம்பம், பாளையம் என பல்வேறு பகுதிகளுக்கு நகர் மற்றும் புறநகர் பேருந்துகள் அதிகளவில் வந்து செல்கின்றன. தற்போது பஸ் ஸ்டாண்ட் புதுப்பிக்கும் பணிகள் நடக்கிறது. அதேநேரத்தில், தொலைதூர ஊர்களாக உள்ள சென்னை, திருச்சி, திருநெல்வேலி, மதுரை, திண்டுக்கல் உள்ளிட்ட ஊர்களுக்கு, பேரூந்துகள் செல்வதில்லை. இதனால் தேவாரம் மற்றும் இதனை சுற்றிலும் உள்ள 30க்கும் மேற்பட்ட கிராம மக்கள் தவிக்கின்றனர்.
தொலைதூர ஊர்களுக்கு செல்ல உத்தமபாளையமோ, போடியோ சென்று செல்ல வேண்டி உள்ளது. எனவே, போக்குவரத்து நிர்வாகம் தேவாரம் பஸ் ஸ்டாண்டில் இருந்து நேரடியாக பஸ்களை இயக்கிட தேவையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர். இதுகுறித்து பொதுமக்கள் கூறும்போது: தேவாரம் ஏலவர்த்தக நகரமாக உள்ளது. இந்த ஊரில் இருந்து நேரடியாக தொலைதூர அரசு பஸ்களை இயக்கிட நடவடிக்கை எடுக்க வேண்டும், என்றனர்.