கூடலூர், பிப்.16: தேவர்சோலை பேரூராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் சிறப்பு அலுவலர்கள், பேரூராட்சி ஊழியர்கள் தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பயன்பாடு குறித்து வணிக நிறுவனங்களில் ஆய்வு மேற்கொண்டனர். மளிகை கடைகள், உணவகங்கள், பேக்கரி, இறைச்சி விற்பனை கடைகள், பெட்டிக்கடைகள் உள்ளிட்ட பல்வேறு வியாபார நிலையங்களில் தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பறிமுதல் செய்து அபராதம் விதித்தனார். மேலும் பிளாஸ்டிக் பைகள் உபயோகப்படுத்தக் கூடாது என்றும், அவற்றை விற்பனை செய்யக்கூடாது என்றும் அவ்வாறு தொடரும் பட்சத்தில் கடுமையான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் என்றும் அதிகாரிகள் வியாபாரிகளுக்கு அறிவுரை வழங்கினர்.