நெல்லை, செப்.5: தேவர்குளம் அருகே 25 மது பாட்டில்களை பதுக்கிய வாலிபரை போலீசார் கைது செய்தனர். நெல்லை மாவட்டம் தேவர்குளம் காவல் நிலையத்திற்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதன்பேரில் தேவர்குளம் காவல் நிலைய எஸ்ஐ ரெங்கசாமி மற்றும் போலீசார் வன்னிக்கோனேந்தல் டாஸ்மாக் கடை அருகேயுள்ள காட்டுப்பகுதியில் சோதனையிட்டனர். அப்போது அங்கு சந்தேகத்திற்கிடமான முறையில் நின்று கொண்டிருந்த வன்னிக்கோனேந்தலை சேர்ந்த மகேந்திரராஜாவிடம் (32) போலீசார் விசாரணை நடத்தினர். விசாரணையில் அப்பகுதியிலுள்ள டாஸ்மாக் பாரில் மகேந்திரராஜா சுண்டல் மற்றும் தின்பண்டங்களை விற்பனை செய்து வந்ததும், அவர் கூடுதல் விற்பனைக்காக 25 மது பாட்டில்களை அப்பகுதியில் பதுக்கி வைத்ததும் தெரிய வந்தது. இதுகுறித்து தேவர்குளம் போலீசார் வழக்குப்பதிந்து விசாரணை நடத்தி மகேந்திரராஜவை கைது செய்து பாளை மத்திய சிறையில் அடைத்தனர். அவரிடமிருந்து 25 மது பாட்டில்கள், ரூ.200 ஆகியவற்றை போலீசார் பறிமுதல் செய்தனர்.
தேவர்குளம் அருகே 25 மதுபாட்டில்கள் பதுக்கிய வாலிபர் கைது
previous post