நெல்லை, செப்.1: தேவர்குளத்தில் வீடு புகுந்து ₹70 ஆயிரம் மதிப்புள்ள நகை, ₹40 ஆயிரத்தை திருடி தப்பிய மர்ம நபர்களை போலீசார் தேடி வருகின்றனர். தேவர்குளம் ஆஞ்சநேயர் கோயில் தெருவைச் சேர்ந்தவர் விஜய் மனைவி வேலுத்தாய் (25). நேற்று முன்தினம் காலை விஜய் வழக்கம்போல் வேலைக்குச் சென்றுவிட்டார். வேலுத்தாய் காலையில் வீட்டை பூட்டி வீட்டு அருகில் உள்ள உறவினர் வீட்டிற்குச் சென்றுள்ளார். பின்னர் மாலையில் வீடு திரும்பிய போது மர்ம நபர்கள் வீடு புகுந்த மூன்றரை பவுன் நகை, ₹1000 மதிப்புள்ள சில்வர் கொலுசு, உட்பட ₹40 ஆயிரத்தையும் திருடி தப்பினர். இதன் மொத்த மதிப்பு ₹1 லட்சத்து 10 ஆயிரம் என்பது போலீஸ் விசாரணையில் தெரியவந்தது. இச்சம்பவம் குறித்து தேவர்குளம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.