தேவதானப்பட்டி, அக். 18: தேவதானப்பட்டி அரசு ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு உள்பட்ட சில்வார்பட்டி ஊராட்சியில் நேற்று பொது சுகாதாரம் மற்றும் நோய் தடுப்புதுறை, உள்ளாட்சி துறை இணைந்து கலைஞரின் வருமுன் காப்போம் திட்ட மருத்துவமுகாம் நடைபெற்றது. இந்த முகாமிற்கு ஊராட்சி மன்ற தலைவர் பரமசிவம் தலைமை வகித்தார். வட்டார மருத்துவஅலுவலர் கோமதி, ஊராட்சி மன்ற துணைத்தலைவர் சுகந்தி முன்னிலை வகித்தனர்.
இந்த முகாமிற்கு க.விலக்கு அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் இருந்து 11 சிறப்பு மருத்துவ அலுவலர்கள் கலந்து கொண்டு சிகிச்சை மற்றும் ஆலோசனைகள் வழங்கினர். ஸ்கேன் பரிசோதனை, இசிஜி, கர்ப்பவாய் பரிசோதனை, ரத்த பரிசோதனை, மற்றும் தத்துவ ஆலோசனைகள் வழங்கப்பட்டது. இந்த முகாமில் 746 நபர்கள் பொது மருத்துவம் பார்க்கப்பட்டது. இதற்கான ஏற்பாடுகளை உள்ளாட்சி துறை, சுகாதார துறை அலுவலர்கள், பணியாளர்கள் இணைந்து செய்தனர்.