தேவதானப்பட்டி, செப். 8: தேவதானப்பட்டி அருகே மேல்மங்கலம் மேலத்தெருவைச் சேர்ந்தவர் பெரியசாமி மகள் பிருந்தா. இவர் கணவர் செல்லப்பாண்டி(28). தற்போது இவர்கள் குடும்பத்துடன் கேரளாவில் வேலை செய்து வருகின்றனர். தம்பதிக்கிடையே தகராறு ஏற்பட்டு, கடந்த 6 மாதத்திற்கு முன் பிருந்தா கோபித்து கொண்டு தந்தை வீட்டிற்கு வந்துவிட்டார். இந்நிலையில் நேற்று முன்தினம் செல்லப்பாண்டி மற்றும் அவரது குடும்பத்தார் பிருந்தா வீட்டிற்கு வந்து சேர்ந்து வாழ வருமாறு அழைத்துள்ளனர்.
இதில் இரு தரப்பினருக்கும் தகராறு ஏற்பட்டு அடிதடியாக மாறியது. இந்த அடிதடியில் மாமனார் பெரியசாமிக்கும், மருமகன் செல்லப்பாண்டிக்கும் காயம் ஏற்பட்டு சிகிச்சைக்காக அரசு மருத்துவமனையில் உள்ளனர். ஜெயமங்கலம் போலீசார், பெரியசாமி புகாரில் செல்லபாண்டி(28), முத்து(45), வடிவேலு(38), சுகன்யா(27), நித்யா(30) ஆகியோர் மீதும், செல்லப்பாண்டி புகாரில் பெரியசாமி, லட்சுமி(40), மலைபெரியசாமி(39), கஸ்தூரி(28) ஆகியோர் மீதும் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.