தேவகோட்டை, ஜூன் 24: தேவகோட்டை தாலுகா கண்ணங்குடி வட்டம் சித்தானூரில் இருந்து தேவகோட்டைக்கு அரசு புதிய பேருந்து வழித்தடத்தை எம்எல்ஏ மாங்குடி பொதுமக்கள் பயன்பாட்டிற்காக கொடி அசைத்து தொடங்கி வைத்தார். இந்த நிகழ்ச்சியில் கண்ணங்குடி திமுக ஒன்றிய செயலாளர் ரவிச்சந்திரன், மாவட்ட கவுன்சிலர் நாகனி,செந்தில்குமார், தேவகோட்டை நகர செயலாளர் கவுன்சிலர் பாலமுருகன், டாக்டர் பூமிநாதன், சித்தனுர் ஊராட்சி முன்னாள் தலைவர் சுசிலா சரவணன், துணைத் தலைவர் சித்ரா முத்து சரவணன், போக்குவரத்து துறை சார்ந்த அதிகாரிகள், திமுக மற்றும் காங்கிரஸ் கட்சியின் முக்கிய நிர்வாகிகள், பொறுப்பாளர்கள், கிராமத்தின் முக்கியஸ்தர்கள்,கிராம மக்கள் கலந்து கொண்டனர்.