சிவகங்கை, மே 21: மாவட்ட நிர்வாகம் சார்பில் தெரிவித்துள்ளதாவது: பொதுமக்களின் குறைகளை கேட்டு உடனுக்குடன் தீர்வு காண உங்களை தேடி உங்கள் ஊரில் என்ற திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. இத்திட்டத்தில் கலெக்டர் உள்ளிட்ட மாவட்ட அனைத்து உயர் அலுவலர்களும் ஒவ்வொரு மாதமும் ஒரு நாள் வட்ட அளவில் தங்கி கள ஆய்வில் ஈடுபட்டு, அரசு அலுவலகங்களை ஆய்வு செய்து மக்களின் குறைகளை கேட்டறிந்து அரசின் திட்டங்கள் மக்களை சென்றடைவதை உறுதி செய்வர்.
இதனடிப்படையில் இன்று ஒரு நாள் கலெக்டர் மற்றும் துறை சார்ந்த அலுவலர்கள் தேவகோட்டை வட்டத்தில் இருப்பார்கள். தொடர்ந்து இன்று மாலை 4 மணி முதல் 6 மணி வரை தேவகோட்டை ராம் நகரில் உள்ள எஸ்எம்ஜி மஹாலில் பொதுமக்கள் மற்றும் துறை அலுவலர்களுடனான கலந்தாய்வு கூட்டம் நடைபெறும்.