பெரம்பலூர், நவ.12: சட்டமன்ற தொகுதிக்கான தேர்தல் பொறுப்பாளர்களுக்கு அனைவரும் முழு ஒத்துழைப்பினை அளிக்க வேண்டும். கிருஷ்ணாபுரத்தில் நடைபெற்ற வேப்பந்தட்டை மேற்கு ஒன்றிய திமுக வாக்குச்சாவடி நிலை முகவர்கள் ஆய்வுக்கூட்டத்தில் ஒன்றியச் செயலாளர் நல்லதம்பி வலியுறுத்தினார்.
பெரம்பலூர் மாவட்டம், வேப்பந்தட்டை தாலுக்கா கிருஷ்ணாபுரத்தில் வேப்பந்தட்டை மேற்கு ஒன்றியத்திற்குட்பட்ட வாக்குச்சாவடி நிலை முகவர்கள் ஆய்வுக் கூட்டம், வேப்பந்தட்டை ஒன்றியச் செயலாளர் நல்லத்தம்பி தலைமையில் நடைபெற்றது. பெரம்பலூர் மாவட்டச் செயலாளர் ஜெகதீசன், பெரம்பலூர் சட்டமன்றத் தொகுதி எம்எல்ஏ பிரபாகரன், பெரம்பலூர் சட்டமன்றத் தொகுதி தேர்தல் பார்வையாளர் தங்க.சித்தார்த் ஆகியோர் கலந்து கொண்டு சிறப்புரையாற்றினர்.
கூட்டத்தில் வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்த்தல், நீக்கல் குறித்தும், 02026- சட்டமன்ற தேர்தலில் திமுக மிகப்பெரிய வெற்றி பெறுவது குறித்தும், வாக்குச்சாவடி நிலை முகவர்களிடம் ஆய்வு நடத்தி குறைகளைக் கேட்டறிந்தனர். கூட்டத்தில், வாக்குச்சாவடி முகவர்கள் நிலை- 2 சிறப்பாக செயல்படுகிறார்களா இல்லையா, அதிலே மாற்ற வேண்டியவர்கள் இருக்கிறார்களா என்பதை ஆய்வுசெய்து அறிவிக்க வேண்டிய இடத்தில், தலைமைக் கழகத்திற்கு தெரிவிக்க வேண்டிய இடத்தில் அவர்களால் நியமிக்கப் பட்டிருக்கும், சட்டமன்ற தொகுதிக்கான தேர்தல் பொறுப்பாளர்களுக்கு அனைவரும் முழு ஒத்துழைப்பினை வழங்க வேண்டும். வாக்காளர் பட்டியல் சரி பார்த்தலையும் தேர்தல் பார்வையாளர்கள் மேற்கொள்ள உள்ளதால் அந்தப் பணிகளை அவர்கள் மேற்கொள்ளவும் நாம் முழு ஒத்துழைப்பு வழங்க வேண்டும் என வேப்பந்தட்டை ஒன்றியச் செயலாளர் நல்லதம்பி அனைத்து ஒன்றிய நிர்வாகிகளையும், கிளைச் செயலாளர்களையும், பாக முகவர்களையும் கேட்டுக் கொண்டார்.
கூட்டத்தில் மாவட்டத் துணைச் செயலாளர் தழுதாழை பாஸ்கர், வேப்பந்தட்டை ஒன்றியக் குழு தலைவர் ராமலிங்கம், பொதுக்குழு உறுப்பினர் முருகேசன், மாவட்டத் தொண்டரணி அமைப்பாளர் ரமேஷ், மாவட்ட அணிகளின் துணை அமைப்பாளர்கள் அன்னமங்கலம் ராமகிருஷ்ணன், தொண்டமாந்துறை ராமகிருஷ்ணன், பரமசிவம், அன்பரசன், செல்வக்குமார், ஒன்றிய அவைத்தலைவர் அம்பேத்கர், ஒன்றிய துணைச் செயலாளர்கள் தங்கமணி, கிருஷ்ண மூர்த்தி, முருகேசன் ஒன்றியக்குழு துணை தலைவர் ரெங்கராஜ் உள்ளிட்ட வேப்பந்தட்டை மேற்கு ஒன்றியத்திற்கு உட்பட்ட கிளைச் செயலாளர்கள், பாக முகவர்கள் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.