சேலம், ஜூன் 10: தமிழகத்தில் கடந்த ஆண்டு நடந்த நியமன தேர்வில் தேர்ச்சி பெற்ற அனைவருக்கும், இடைநிலை ஆசிரியர் பணி நியமனம் வழங்க வேண்டும் என கோரிக்கை மனு அளிக்கப்பட்டுள்ளது. சேலம் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் பொதுமக்கள் குறைதீர் கூட்டம் நேற்று நடந்தது. இதில், சேலத்தை சேர்ந்த இடைநிலை ஆசிரியர்கள் சிலர் வந்து மனு ஒன்றை அளித்தனர். இதுகுறித்து அவர்கள் கூறுகையில், ‘‘தமிழகத்தில் கடந்த 2013ம் ஆண்டு முதல் இடைநிலை ஆசிரியர் காலிப்பணியிடங்களை நிரப்பவில்லை. 2013, 2017, 2019 மற்றும் 2022 ஆண்டுகளில் தகுதித்தேர்வு நடந்துள்ளது. தொடர்ந்து கடந்த ஆண்டு நடந்த நியமன தேர்வில் 25 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர். ஆனால், இதில் தேர்ச்சி பெற்றவர்களுக்கு 2,768 பணியிடங்கள் மட்டுமே ஒதுக்கப்படுகிறது. இதனால் கடந்த 12 ஆண்டுகளாக பணிநியமனத்திற்காக காத்திருந்தவர்கள் ஏமாற்றம் அடைந்துள்ளோம். எனவே, கடந்த ஆண்டு தேர்வில் தேர்ச்சி பெற்ற அனைவருக்கும் முதலில் பணிநியமனம் வழங்க வேண்டும். அதன்பின்னர் காலிப்பணியிடங்கள் இருப்பின், அடுத்த தேர்வினை நடத்த வேண்டும்,’’ என்றனர்.இதேபோல், தமிழ்நாடு விவசாயிகள் பாதுகாப்பு சங்கத்தினர் அளித்த மனுவில், `கூட்டுறவு சங்கங்களில் பயிர்க்கடன் வழங்க, சிபில் ஸ்கோர் பார்க்கும் நடைமுறையை கைவிட வேண்டும்,’’ என்று வலியுறுத்தினர்.
தேர்ச்சி பெற்ற அனைவருக்கும் ஆசிரியர் பணி கேட்டு மனு
0
previous post