திருச்செங்கோடு, ஜூன் 7: திருச்செங்கோட்டில் வருடந்தோறும் வெகு விமரிசையாக கொண்டாடப்படும் வைகாசி விசாகத் திருவிழா, கடந்த 9ம் தேதி கொடியேற்றத்துடன் துவங்கியது. வரும் 10ம் தேதி அர்த்தநாரீஸ்வரர் தேரோட்டம் நடைபெற உள்ளது. திருச்செங்கோடு மற்றும் சுற்றியுள்ள பல்வேறு மாவட்டங்களில் இருந்து பக்தர்கள் தேரோட்டத்தில் பங்கேற்க திரண்டு வருவார்கள். ஆகவே அன்றைய தினம் பள்ளி, கல்லூரிகளுக்கு உள்ளூர் விடுமுறை விடவேண்டும் என ஆர்டிஓவுக்கு கிரிவலம் நலச்சங்கம், இந்து முன்னணி, தேசிய சிந்தனை பேரவை ஆகிய இயக்கங்கள் கடிதம் மூலம் கோரிக்கை விடுத்துள்ளனர்.
தேரோட்ட விழாவிற்கு உள்ளூர் விடுமுறை
0
previous post