தர்மபுரி, ஜூன் 19: தர்மபுரி மாவட்டம், அதியமான்கோட்டையில் நேற்று தேய்பிறை அஷ்டமி பெருவிழா நடந்தது. விழாவையொட்டி காலையில் மூலவருக்கு சிறப்பு அபிஷேகம் நடந்தது. இதையடுத்து காலை 11 மணியளவில், காலபைரவர் அர்த்தநாரீஸ்வரர் அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள்பாலித்தார். விழாவில், தர்மபுரி, சுற்றுவட்டாரம் மற்றும் கர்நாடகாவை சேர்ந்த பல ஆயிரக்கணக்கான பக்தர்கள் நீண்ட வரிசையில் நின்று சாமி தரிசனம் செய்தனர். மேலும் பூசணி தீபம் ஏற்றியும், மிளகாய் செலுத்தியும் சாமியை வழிபட்டனர். மாலையில் மிளகாய் யாகம், குருதியாகம், சத்ருசம்ஹார யாகம் உள்ளிட்ட யாகங்கள் நடந்தன. விழாவிற்கான ஏற்பாடுகளை இந்து சமய அறநிலையத்துறை நிர்வாகம் செய்திருந்தது.
தேய்பிறை அஷ்டமியையொட்டி காலபைரவருக்கு சிறப்பு பூஜை
0
previous post