கோத்தகிரி, மே 29: கோத்தகிரி அருகே தேயிலை தோட்ட பெண் தொழிலாளர்களை நோக்கி கரடி வந்ததால் பரபரப்பு ஏற்பட்டது. நீலகிரி மாவட்டம் கோத்தகிரி சுற்று வட்டாரப் பகுதிகளில் சமீப காலமாக கரடிகளின் எண்ணிக்கை அதிகரித்து காணப்படுகிறது. குறிப்பாக உணவு மற்றும் குடிநீர் தேடி குடியிருப்பு பகுதியை நோக்கி உலா வருவதால் பொது மக்கள் அச்சம் அடைந்துள்ளனர். இந்த நிலையில் கோத்தகிரி அருகேயுள்ள அரவேனு தேயிலை தோட்டத்தில் தோட்ட தொழிலாளர்கள் தேயிலை பறித்துக் கொண்டிருக்கும் போது கரடி ஒன்று உலா வந்தது. அப்போது அங்கிருந்த பெண் தொழிலாளர்கள் கரடியை ஏன் எங்கப்பக்கமே வர்றே, அந்த பக்கம் போ என்றதும் கரடி அங்கிருந்து சென்றது. இதையடுத்து தேயிலை தோட்ட பகுதிகளில் உலா வரும் கரடியின் நடமாட்டத்தை கண்காணித்து அடர்ந்த வனப்பகுதிக்குள் விட நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை எழுந்துள்ளது. இந்த காட்சிகள் தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.
தேயிலை தோட்டத்தில் பெண் தொழிலாளர்களை விரட்டிய கரடி
0