தேனி, ஆக. 20: தேனியில் தேமுதிக சார்பில் நடக்க உள்ள வறுமை ஒழிப்பு தின பொதுக்கூட்டத்தில் தேமுதிக பொருளாளர் பிரேமலதா கலந்து கொண்டு சிறப்புரையாற்ற உள்ளார். இதுகுறித்து தேனி மாவட்ட தேமுதிக செயலாளர் எம்.என்.கிருஷ்ணமூர்த்தி கூறியதாவது : தேனி நகர தேமுதிக நிர்வாகி இல்ல திருமணவிழா நாளை தேனியில் நடக்க உள்ளது. இவ்விழாவில் தேசிய முற்போக்கு திராவிட கழக பொருளாளர் பிரேமலதா விஜயகாந்த் கலந்து கொண்டு திருமணத்தை நடத்தி வைக்க உள்ளார்.
விஜயகாந்த் பிறந்த நாள் விழாவை வறுமை ஒழிப்பு தினமாக கொண்டாடும் வகையில், நாளை மாலை தேனி அல்லிநகரம் பஸ் நிறுத்தம் அருகே நடக்கும் வறுமை ஒழிப்பு தின பொதுக்கூட்டத்தில் பிரேமலதா விஜயகாந்த் கலந்து கொண்டு நலத்திட்ட உதவிகள் வழங்கி சிறப்புரையாற்ற உள்ளார் என தேமுதிக மாவட்ட செயலாளர் கிருஷ்ணமூர்த்தி தெரிவித்தார்.