Friday, February 23, 2024
Home » தேமுதிக தலைவர் விஜயகாந்த் உருவபடத்தை அரிசியில் வரைந்த ஓவியர் உடல் நலகுறைவால் உயிரிழந்த

தேமுதிக தலைவர் விஜயகாந்த் உருவபடத்தை அரிசியில் வரைந்த ஓவியர் உடல் நலகுறைவால் உயிரிழந்த

by Karthik Yash

ஆரணி, டிச.29: தேமுதிககட்சியின் நிறுவனத்தலைவரும், நடிகருமான விஜயகாந்த்(71), இவர், உடல்நலக்குறைவால் சென்னையில் உள்ள தனியார் மருத்துவ மனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்றுவந்தார், இந்நிலையில் அவர் நேற்று காலை சிகிச்சை பலனின்றி மருத்துவமனையில் உயிரிழந்தார். பின்னர் அவரது உடலை பொது மக்கள் அஞ்சலி செலுத்துவதற்காக வைக்கப்பட்டது. தொடர்ந்து அவரது உடலுக்கு தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின், எதிர் கட்சிதலைவர் எடப்பாடி பழனிச்சாமி, அரசியல் கட்சி தலைவர்கள், நடிகர்கள், திரைக்கலைஞர்கள், ரசிகர்கள், பொதுமக்கள் என ஏராளமானோர் அஞ்சலி மற்றும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில், திருண்ணாமலை மாவட்டம், ஆரணி டவுன் பகுதியைச்சேர்ந்த ஓவியர் ஹரிஸ்பாபு(43), இவர் நேற்று தனது வீட்டில், இறந்த தேமுதிக நிறுவன தலைவர் விஜயகாந்த் திரு உருவ படத்தை 3 கிலோ கருப்பு வண்ணம் பூசப்பட்ட அரிசியில் தனது கையால் சுமார் 5 மணி நேரத்திற்கு மேலாக 6 அடி அகலமும், 8 அடி உயரத்திற்கு தரையில் ஓவியமாக வரைந்தார். தொடர்ந்து, அவரது திரு உருவ படத்திற்கு அஞ்சலி செலுத்தினார். மேலும் விஜயகாந்த உருவ படத்தை ஓவியர் அரிசியில் வரைந்து அஞ்சலி செலுத்திய வீடியோ சமூக வலைய தளங்களில் வைரலாக வருகிறது. இதனை, ஏராளமானோர் தங்களின் செல்போன்களில் வாட்ஸ் அப் ஸ்டேட்டஸ் வைத்தும், சமூக வலையதளங்களில் ஷேர் செய்து வருகின்றனர்.

You may also like

Leave a Comment

5 × 1 =

Dinakaran is a Tamil daily newspaper distributed in India. As of March 2010, Dinakaran is the largest Tamil daily newspaper in terms of net paid circulation, which was 1,235,220. In terms of total readership, which was 11.05 Lakhs as of May 2017, it is the second largest. Dinakaran is published from 12 centers in India namely Delhi, Mumbai, Chennai, Bengaluru, Madurai, Coimbatore, Trichy, Salem, Nagercoil, Vellore, Nellai and Pondicherry.

Address

@2023 – Designed and Developed by Sortd.Mobi