தாரமங்கலம், ஆக.12: சேலம் மாவட்டம் தாரமங்கலம் அடுத்த மேட்டு மாரனூர் கிராமத்தில் மாற்று கட்சியினர் திமுகவில் இணையும் நிகழ்ச்சி நேற்று நடைபெற்றது. ஒன்றிய செயலாளர் ராஜ ஐயப்பன் தலைமை வகித்தார். தேமுதிக வடக்கு ஒன்றிய செயலாளர் கண்ணன் தலைமையில் தேமுதிக, அதிமுக, பாமக ஆகிய கட்சிகளை சேர்ந்த 500க்கும் மேற்பட்டோர் திமுகவில் இணைந்தனர்.
அவர்களுக்கு சேலம் மத்திய மாவட்ட செயலாளர் ராஜேந்திரன் எம்எல்ஏ., சால்வை அணிவித்து வரவேற்று பேசுகையில், ‘திமுகவில் இணைந்தவர்கள் தமிழ் நாட்டின் வளர்ச்சிக்கு உதவியாக இருக்க வேண்டும்.
அந்த உழைப்புக்கு கட்சியில் உரிய அங்கீகாரம் வழங்கப்படும். இப்பகுதி மக்களின் கோரிக்கையான காவிரி உபரிநீர் திட்டத்தின் கீழ், ஆருர்பட்டி ஏரிக்கு தண்ணீர் கொண்டுசெல்லப்படும்’ என்றார். நிகழ்ச்சியில் மாவட்ட விவசாய அணி துணை அமைப்பாளர் ராதாகிருஷ்ணன், மாவட்ட கவுன்சிலர் சண்முகம், மாவட்ட பிரதிநிதி சரவணன், ஒன்றிய நிர்வாகிகள் ராஜேந்திரன், அறிவழகி தங்கராஜ், விஜி சரவணன், அருள், ஒன்றிய கவுன்சிலர் ராஜா உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.