தேன்கனிக்கோட்டை, ஆக.4: தேன்கனிக்கோட்டை, வெங்கடேஷ்வர சுவாமி பாத யாத்திரை கமிட்டி சார்பில் திருமலை திருப்பதி கோயிலுக்கு ஆண்டுதோறும் பக்தர்கள், பாத யாத்திரை மேற்கொண்டு வருகின்றனர். 12ம் ஆண்டு பாத யாத்திரை நேற்று புறப்பட்டது. தேன்கனிக்கோட்டை கவி லட்சுமி நரசிம்ம சுவாமி, பேட்டராய சுவாமி, ராம ஆஞ்சநேயர் கோயில்களில் சிறப்பு பூஜைகள் செய்து, 200க்கும் மேற்பட்ட பக்தர்களுடன் பாத யாத்திரை புறப்பட்டனர். தேன்கனிக்கோட்டையில் இருந்து கெலமங்கலம், உத்தனப்பள்ளி, சூளகிரி, வேப்பனஹள்ளி, நாச்சிகுப்பம், குப்பம், வி.கோட்டா, பைரெட்டிபள்ளி, பலமனேர், பங்காருப்பள்ளி, காணிப்பாக்கம், சஞ்சீவராயனப்பள்ளி, ஹரிட்டேஜ் கல்லுாரி, சந்திரகிரி கோட்டை, சீனிவாசமங்கபுரம் வழியாக திருமலை திருப்பதி கோவிலுக்கு வரும் 10ம் தேதி பக்தர்கள் சென்றடைந்து சுவாமி தரிசனம் செய்கின்றனர். ஒரு வாரம் நடக்கும் இந்த பாத யாத்திரையில், தினமும் 40 கி.மீ தூரம் பக்தர்கள் நடந்து செல்கின்றனர்.
தேன்கனிக்கோட்டையில் இருந்து 200 பக்தர்கள் பயணம்
previous post